அப்பா வாழ்த்து கவிதை - Father's Day Wishes

அப்பா வாழ்த்து கவிதை - Father's Day Wishes
  • Collection of Father's Day Wishes in Tamil
  • Father's Day wishes in Tamil
  • Latest Tamil Father's Day Wishes
  • 2024 Father's Day Wishes in Tamil
  • Father's Day Kavithai in Tamil

இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில்
அது எனது அப்பாவின் இதயம் தான்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


சிறு வயதில் ஆசானாய்,
வாலிப வயதில் தோழனாய்
வாழ்வில் அங்கம் வகிக்கும்
அன்பிற்குரிய அப்பாவுக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Father's Day Wishes in Tamil

நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


ஒற்றை வரியில் அப்பா
ஓராயிரம் சுமைகளை சுமப்பவர்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,
கவசம்போல் என்னை காக்கவேயென்று
நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!
இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்!
தந்தையர் தின வாழ்த்துகள்!


வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர
வேறு குறை எதுவும் இல்லை
முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார் அப்பா


அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகளுக்கு அப்பா அடிமையென்று
Happy Father's Day

Father's Day Wishes in Tamil

நம் வாழ்க்கையை விருச்சமாக்க
தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும்
அதை முகத்தில் காட்டாமல்
சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா
தந்தையர் தின வாழ்த்துக்கள்


தான் கீழே இருந்தாலும் நம்மை
மேலே தூக்கும் ஒர் உறவு
அப்பா


அப்பா ஏழையாக இருந்தாலும்
நம்மை எப்போதும் ஏழையாக
வளரக்க நினைத்ததில்லை


எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு
ராணியாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு
இளவரசியாகவே இருக்கிறாள்


உலகிலேயே அதிக
பாதுகாப்புமிக்க இடம்
தந்தையின் கை

Father's Day Wishes in Tamil

நம்மல எந்த சுழ்நிலையிலும் யார்க்கிட்டயும் எதுக்காகவும்
விட்டு குடுக்காத ஒரே உறவு அப்பா மட்டும் தான்


எல்லா அப்பாக்களுமே ராஜாவாக இருப்பதில்லை,
ஆனால் எல்லா பிள்ளைகளுமே
இளவரசர்களாகவும், இளவரசியாகவும் தான்
வளர்க்கப்படுகிறார்கள்


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன் எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்


அம்மாவின் வலியை ஐந்து வயதில் கூட உணரலாம்
ஆனால் ஒரு தந்தையின் வலியை
நீ ஒரு தந்தையானால் மட்டுமே உணர முடியும்


என் மகன் உறவு
அவன் மனைவி வரும் வரை
என் மகளின் உறவு
என் ஆயுள் உள்ள வரை


இருக்கும்போது கற்றுக்கொடுத்ததை விட
இறந்த பிறகு அதிகமாய்
கற்றுக்கொடுக்கும் ஜீவன் அப்பா


பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஓரே உயிர் அப்பா!


என்னை மட்டும் அல்ல,
என் கனவுகளையும்
சுமந்து கொண்டு நடக்கிறார் என் அப்பா!


உலகை நமக்கு அறிமுகம்
செய்வது தாய் என்றால்
உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்துவது
தந்தை தான்


ஆராரோ பாட்டுப்பாடி
தாலாட்டத் தெரியாத
தாயும் நீ தான் அப்பா


பெண்களுக்கு பாதுகாப்பு என்றவுடன்
நினைவுக்கு வரும் முதல் ஆண்
தன் தகப்பன் தான்


மறுபிறவி ஒன்று இருந்தால்
மீண்டும் உனக்கே மகளாக
பிறந்திட வேண்டும் அப்பா

Father's Day Wishes in Tamil

அசல் முன் நிழல் நடப்பது போல்,
என்றும் என் முன் நீ நடப்பாயே
முன்மாதிரியாக.. அப்பா!


பெண்கள் வைக்கும் அன்பில்
ஏமாற்றத்தை அளிக்காத
ஒரே ஆண் தன் தந்தை மட்டுமே


எந்த பெண்ணும் அவள் கணவணுக்கு
ராணியாக இல்லாமல் இருக்கலாம்
ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு
இளவரசியாகவே இருக்கிறாள்..

Father's Day Wishes in Tamil

நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


அம்மாவின் பாசம் கருணையில் தெரியும்
அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்


வாட்ட வந்த வறுமையை
சிரித்துப் பேசி வழியனுப்பி வைத்தவர் நீ
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக அப்பா


அப்பாவின் அன்பை விட சிறந்தது
இந்த உலகில் எதுவும் இல்லை