கணவன் மனைவி கவிதைகள் - Husband Wife Kavithai

கணவன் மனைவி கவிதைகளின் தொகுப்பு - Collection of Best Husband Wife Qutoes, Husband Wife Quotes in Tamil, Latest Tamil Husband Wife Kavithai, கணவன் மனைவி கவிதை ஸ்டேட்டஸ், கணவன் மனைவி கவிதைகள், தமிழ் கணவன் மனைவி கவிதைகள்

கணவன் மனைவி கவிதைகள் - Husband Wife Kavithai
கணவன் மனைவி கவிதைகள் - Husband Wife Kavithai
  • Collection of Best Husband Wife Kavithai in Tamil
  • Husband Wife Quotes in Tamil
  • Latest Tamil Husband Wife Quotes
  • 2024 Husband Wife Quotes Tamil
  • Tamil Husband Wife Quotes
  • Tamil Husband Wife Status
  • தமிழ் கணவன் மனைவி ஸ்டேட்டஸ்
  • கணவன் மனைவி கவிதைகள்
  • தமிழ் கணவன் மனைவி கவிதைகள்
  • Husband Wife Quotes
  • Husband Wife WhatsApp Status

கணவனிடம் எதையும் மறைக்காத மனைவிக்கும்
மனைவியை யாரிடமும் விட்டு கொடுக்காத
கணவனுக்கும் பிரிவு என்பது இல்லை


நமக்காக யோசிக்க
ஒரு வாழ்க்கை துணை இருக்கிறது
என்பதை உணரும் போது தான்
நம் வாழ்க்கை தொடங்கும்


மனைவிக்கு தன் கணவனும்
கணவனுக்கு தன் மனைவியும்
தான் முதல் குழந்தை


நம் கவலைகளை மறைய வைத்து
நம்மை சிரிக்க வைக்க
உண்மையாக நேசிப்பவர்களால்
தான் முடியும்


நம் அன்பை புரிந்து கொண்ட இதயம்
நம்முடைய கஷ்டங்களை சொல்லாமலே
புரிந்து கொள்ளும்!


என் சந்தோஷத்தை விட
உன் சந்தோஷம் தான்
முக்கியம் எனக்கு


வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ
எது நடந்தாலும் கடைசி வரைக்கும்
நான் உன் கூடவே இருப்பேன்


நம் அன்பை முழுமையாக புரிந்து கொண்ட
ஒரு உறவால் எப்போதும் நம்மை விட்டு
பிரிந்து செல்ல முடியாது


முத்தம் தான் நீ கொடுக்கும்
தண்டனை என்றால் எப்போதும்
தவறு செய்து தண்டனை பெற
விரும்புகிறேன் நான்


நிறைய கொஞ்சல்களும்
கொஞ்சம் கெஞ்சல்களும்
சேர்ந்தது தான் கணவன்
மனைவி உறவு


உன்னால் என் காதலை உணர்ந்தேன்
அந்த காதலால், உன் உள்ளத்தை
நான் அறிந்தேன்


காதலை வார்த்தைகளால் தான்
சொல்ல வேண்டும் என்பதில்லை


குழந்தையை பெற்றெடுக்க
தன் மனைவி படும் கஷ்டத்தை
பார்க்கும் கணவன் வாழ்நாளில்
வலியை மறைக்க மாட்டான்


தன் மனைவியிடத்தில்
குறைகள் கண்டுபிடிக்காத
கணவன் கிடைப்பது
ஒரு வரம் தான்


உன்னோடு நான் வாழ்ந்த
ஒரு ஆண்டை போல்
இன்னும் நூறு ஆண்டுகள்
வாழ விரும்புகிறேன்.


எனக்கு ஒரு கஷ்டம் வந்தா
உன்னால எப்படி தாங்கி கொள்ள
முடியாதோ அது போல தான்
உனக்கு ஒரு கஷ்டம் வந்தா
என்னாலும் முடியாது


மனைவி தன் கணவனிடம்
எதிர்பார்ப்பது கணவன் தன்னோடு
செலவிடும் கொஞ்ச நேரத்தை
மட்டும் தான்


கணவன் சிறியதாய்
எது வாங்கி கொடுத்தாலும்
பெரிய சந்தோஷம் தான் மனைவிக்கு


குழந்தை பிறந்த பின்னரும்
துளி அளவு கூட குறையாத
பாசத்தை தன் கணவனிடமிருந்து
மனைவி விரும்புகிறாள்!


மனைவிக்கு எப்போதும் இருக்கும்
கோபம் தன் கணவனை
பற்றியதாக மட்டும்
தான் இருக்கும்


மனைவியின் சந்தோஷம் எதுவென்றால்
தன் கணவனின் சந்தோஷத்தை
பார்த்து ரசிப்பதே


எப்போது சண்டையைத் தொடங்குவாய்
என்று காத்திருக்கிறேனடா, ஏனெனில் உன்
சமாதான ஊடலை நான்
ரசிக்கவேண்டுமல்லவா?


உந்தன் நெற்றி மீது
ஒற்றை முத்தமிட்டு
எனக்கானவன் நீதான் என
முத்திரை பதித்திட ஆசையடா


தினமும் துயிலெழுந்து
முகம் பார்க்கையில்,
நீ என்னுடையவனா என்று
என்னைக் கிள்ளிக்கொள்கிறேன்


அழகானவன் அல்ல
எனக்கு மட்டும்
அழகாய் தெரிபவன்


தினமும் துயிலெழுந்து
உனக்காகவே முகம் பார்க்கிறேன்
உன்னால் நான் அழகுபெறுவதை
ரசிப்பதற்காக


நெற்றியில் இருக்கும்
சிவப்புப் பொட்டு நீ
என் பெண்மைக்கு
நீ தந்த பரிசல்லவோ
கணவனே என்
ஆருயிர் காதலனே


கடல் நீர் வற்றும் வரை
காகித மலர்கள் வாடும் வரை
ஆகாயம் அழியும் வரை
என் ஆயுள் முடியும் வரை
உன்னை காதலிப்பேனடா


வணங்குவது எந்தன் கை என்றாலும்
வேண்டுதல் என்னவோ
என்னவனுக்கே


நாம் ஒருவரை நேசிக்கும் போது
நம் முகம் அழகாய் தெரியும்
நம்மை ஒருவர் நேசிக்கும் போது
இந்த உலகமே பேரழகாய் தெரியும்


அவனின் அணைப்பின் கதகதப்பில்
அதிகாலை குளிரும் சற்றே
அடங்கித்தான் போகிறது


எனக்கான சிறிய உலகத்தில்
நான் தேடிக்கொண்ட
மிகப் பெரிய உறவு நீ
நீண்டு பயணம் செய்ய


குடையால் தடுக்க முடியவில்லை
எனக்குள் பெய்யும் மழை
ஆமாம் அவனின் அன்பால்
முழுவதும் நனைந்து, தோய்ந்து,
மெதுவாய் கரைகிறேன் அவனுக்குள்


கணவன் மனைவி காதல் என்பது
கட்டிப் பிடிப்பதிலும்,
முத்தம் கொடுப்பதிலும்
மட்டும் இல்லை, தன்னோடு
வாழ்பவரின் வலியையும்,
உணர்வையும் புரிந்து
வாழ்வதில்தான் இருக்கிறது


பாசத்தைப் பொழிய
பலர் இருப்பினும்
மனம் களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
என்னவோ உன்
மடியைத்தானடா


என் இதயம் இருப்பது
என்னவோ எனக்குள் தான் இருக்கிறது
ஆனால் அது துடிப்பதென்னவோ
உனக்காக மட்டும் தான்


களிப்பு மிகுதியில் காதல் கசிந்து
உன் கன்னம் கடிக்க ஆசையடா
காதல் சுவடொன்று பதிக்க


கணவன் பணக்காரனாக
இல்லை என்றாலும் பரவாயில்லை
கடன் காரனாக இருக்கக் கூடாது
என்று நினைக்கும் நீதானடி
உண்மையான மனைவி


அளவுக்கு மிஞ்சினால்
அமிழ்தமும் நஞ்சாமடா
எனக்கு அமிழ்தமாகவே
தெரிகிறது உன் முத்தம்
அளவுக்கு மிஞ்சினாலும்


எவ்வளவு பெரிய
துன்பத்தையும் ஒரே
ஒரு புன்னகையால்
விழுங்கி விடுவாய்


திக்கு முக்காடி போனேனடா
உன் பரவச அணைப்பில்
உன் அன்பின் மிகுதியால்
அளவில்லா காதலின்
வெகுமதியாய் உனக்கு நானும்
எனக்கு நீயும்.


என் இதயத்தில் நீ குடியிருப்பதில் எனக்கு
ஆட்சேபனையும் இல்லை. ஆனால்,
முன்பணமாக ஒரு முத்தமும்,
வாடகையாக ஒரு பார்வை நித்தமும்
வீசிப் போ


தன் மனைவியின் கோபத்தையும்
பிடிவாதத்தையும் புரிந்து கொள்ளும்
எந்த ஒரு ஆண்மகனும் தனது
மனைவி கண்ணீர் சிந்துவதை
விரும்புவதில்லை.


எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்
ஒரு ஆணுக்கு மனைவி தான்
ஒப்பற்ற துணை. ஒரு பெண்ணுக்கு
கணவன் தான் ஈடு இணையற்ற துணை
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.


உயிர் மெய் எழுத்துக்களால்
நிறைந்திருக்கும் எனது கவிதைகள்
மட்டும் உனக்கு இல்லை, அதில்
கலந்திருக்கும் உயிரும் உனக்கானது தான்.


நான் கேட்காமல் கிடைத்த வரம் நீ
இப்போது வரமாக கேட்கிறேன்
உன்னை பிரியாத வாழ்வு
வேண்டும் என்று.


எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை
எந்த சூழ்நிலையிலும் உன்னை
விட்டுகொடுக்க மாட்டேன்
விட்டுச் செல்லவும் மாட்டேன்
என்று இருக்கும் ஒரு ஆண்.


நீ இல்லாத நேரங்களில் கூட
உன் நினைவுகளிலும்
உன் முத்தச் சத்தம்
என்னை இம்சிக்கிறதடா


திருமணத்திற்கு பின் ஆணின் வாழ்க்கை
நரகம் என்றால் அது பொய்! மனைவியை
நேசிக்க தெரியாதவனின்
வாழ்க்கை தான் நரகம்.


கோபமாக நான் நிற்கும் போது,
உன் செல்லக் கொஞ்சல் போதும் பெண்ணே,
என் கோபமும் வெட்கமாகி
போகிறது உன்முன்னே


உன்மேல எனக்கு இருக்கிற
உரிமை எனக்கு மட்டுமே
சொந்தமானது யாருக்கும்
விட்டு தரமாட்டேன்.


கோபத்திலும் எட்டி நிற்காமல்
கிட்டவந்து கட்டியணைத்துத்
திட்டும் அவன், ஓர் விந்தை!


உலகம் மறந்து உறைந்து போவேன்
உன் விரல் பிடிக்கும்
ஒரு நொடிப் பொழுதில்


காதல் மொழியில்,
கோபம் கூட அன்பின்
வடிவமே


நமக்காக ஏங்கும் காதலும்
நம்மைச் சுற்றிச்சுற்றி வரும்
காதலும், கிடைத்தால் அதை விட
அன்பு காட்ட எவராலும் முடியாது.


உனது சிணுங்கல்களை
நான் ரசிப்பதற்காகவே
சண்டை போடுகிறாயோ?


இன்னும் எத்தனை
வருடங்கள் ஆனாலும்,
உன் மீது வைத்த காதல்
குறையவே குறையாது.


சண்டையை தொடங்குவது நீ,
சண்டையை முடிக்க ஒவ்வொரு
முறையும் உன்னை சமாதானம்
செய்வது நான்!


இருமனங்கள் உறவாட
வார்த்தைகள் ஏதும் தேவையில்லை
பார்வைகள் பேசும் மௌன மொழியே
போதும் என்பதை உணர்ந்தேன்
உன் விழி காதல்மொழி பேசுகையில்


ஓங்கப்பட்ட கை இறக்கப்பட்டால்
அந்த உறவின் மீது உள்ள
அன்பு வானுயர்ந்தது!


என்ன மந்திரம் செய்தாயோ தெரியவில்லை
நின் இமை சிறகில் பறக்க விரும்பிய நான்
உந்தன் இதழ் சிறையில் அகப்பட்டுவிட்டேன்
ஆயுட்கால கைதியாக.


கோபப்படுவது நீயாக
இருக்கும் போது
உன்னிடம் தோற்பது
கூட எனக்கு சுகமே.


எனக்கு நீ அழகு
உனக்கு நான் அழகு
காதலுக்கு நாம் அழகு!


எனக்கான சிறிய உலகத்தில்
நான் அமைத்து கொண்ட
மிக பெரிய உறவு நீ!


என் கோபங்களும்
கதிரவனைக் கண்ட பனியாய்
உருகித்தான் போகிறது
நீ இதமாய் கட்டி
அணைத்து என்
காதோரம் இதழ்
முத்தம் பதிக்கையில்.


அப்பாவி பெண் கூட
புத்திசாலி கணவனை
ஆள முடியும். ஆனால்,
புத்திசாலிதானம் உள்ளவளே
முட்டாள் கணவனை
ஆள முடியும்.


தீபத்தை ஒளியும்
மலரை மணமும்
உடலை நிழலும் போல
உன்னில் என்னை
தொலைத்து நின்னை
யான் பிரியாதிருக்கும்
வரம் ஒன்று வேண்டும்!


பெற்றவர்களின் பரிவு
வாலிபம் வரை
உறவினர்களின் பாசம்
தேவை முடியும் வரை
உன்னுடனான என் உறவு
நீளலாமே வாழ்வின்
எல்லை வரை!


என்னுடன் அவள்
அவளுடன் நான்
அழகாய் எங்கள்
உலகம்


எனக்காக பிறந்தவன் நீ
உனக்காக பிறந்தவள் நான்


உண்மையான அன்போடு
ஒரு இதயம் நம்மோடு
நமக்காக நடமாடினால்
வாழ்க்கையே சொர்க்கம்!


நம் அழகு என்பது
முகத்திலோ, நிறத்திலோ
இல்லை! நாம் இருவரும்
வாழும் விதத்தில் உள்ளது!


ஒன்றை மட்டும்
புரிந்து கொள்
இங்கு நான் என்பதும்,
நீ என்பதும் வேறு
வேறு இல்லை!


இன்னொரு பிறவி பிறக்கப்
போவதும் இல்லை
இப்பிறவியில் கிடைத்த
உன்னை விட்டுப்
பிரியப் போவதுமில்லை


என் காதலின்
கருவறையும் நீ
கல்லறையும் நீ


நீ என்னுடன் இருக்கும்
ஓர் நொடி போதும்
நான் இந்த உலகத்தை
மறக்க


எதிர்பாராமல் பெய்யும் மழை போல
என் வாழ்வில் வந்த நீ.
உன் அன்பால் என் மனம்
குளிரவைத்து, என் இருண்ட
வாழ்க்கையில், வானவில்லாய்
வண்ணங்கள் பூசினாய்.


கடலின் அலைகள்
எப்படி ஓய்வதில்லையோ
அது போல தான் நான்
உன் மீது கொண்ட காதலும்
ஒரு நாளும் ஓயாது!


நிறை குறை காணாது
ஒருவர்மீது வைக்கும் அன்பு
முழுமையானது!


காதல் கேட்க இனியது!
செய்ய கடியது!


  • Manaivi kavithaigal in tamil
  • heart touching husband and wife love kavithai in tamil
  • Love quotes in tamil for husband
  • Wife kavithai tamil
  • Husband quotes in tamil
  • வாழ்க்கை துணை கவிதை
  • முதல் குழந்தை கவிதை
  • மனைவிக்கு கவிதை
  • மனைவி ஸ்டேட்டஸ்
  • மனைவி கவிதை வரிகள்
  • நல்ல மனைவி கவிதை
  • கணவன் மனைவி ஸ்டேட்டஸ்
  • Marriage Kavithai Wishes

என்னருகில் நீ இருந்தால்
நான் ஒரு சிற்பமே! இல்லாவிடில்,
நான் ஒரு அற்பமே!
நம்மை பிரிக்க
ஆண்டவனும் நினையான்
ஒரு கணமே!


கம்பன் எழுதிய காவியங்களில்
எழுதப்படாத காவியம்
நம் காதல்!


உன்னோடு நான் இருக்கையில்
உலகின் பரப்பளவு
சில சதுர அடிகள்!


மழை பொழியும் நேரம்
ஓர் குடையில் இருவரும்
தொலைதூரம் இடைவெளி
இல்லாது, இருக்கமாய்
மழையை ரசித்தபடி
செல்ல வேண்டும்
ஓர் அழகிய காதல்
பயணம்


நீயும் நானும்
வானும் நிலவும்
போல சேர்ந்தே
இருப்போம் வா


அழகிய நிலவொளியில்
நாம் இருவர் மட்டும் தனியாக
விழிகள் போதும், நாம் இருவரும்
பேசிக்கொள்ள! உன் தோளில் நான்,
என் இதயத்தில் நீ! மொழிகள் தேவையில்லை!


உந்தன் கன்னக்குழியில் புதைந்து
நான் முத்தாய் மாற ஆசை


என் கண்கள் தினமும்
பலரைப் பார்க்கலாம். ஆனால்,
என் மனம் மீண்டும் மீண்டும்
பார்க்க வேண்டுமென நினைப்பது
உன்னை மட்டுமே!


அழகைக் காட்டிமயக்கும்
இந்த மாய உலகில்
நீ மட்டும் உன்
அன்பைக் காட்டி
என்னை மயக்கினாய்


நான் சொல்வதை எல்லாம்
செய்தாக வேண்டும் என்ற
கட்டளைகள் இல்லாத
காதல் அழகானது!


உன் கண்ணில் என் பிம்பத்தைக்
காணும் ஒவ்வொரு நொடியும்,
யுகயுகமாய் ரசித்து கழிக்கிறேன்


அன்பே, உன் கால்தடம்
பட்ட இடத்தில் முட்டிக்கால்
போட்டு முத்தமிட்டேனடி
நீ கால் பதித்துச் சென்ற
மணலின் ஓவியத்தை
சிலையின் சிற்பமாக்க!


உன்னை கட்டியணைத்துக் கொண்டு
இந்த உலகம் மறந்து வாழ
ஆசை என்னவனே.


என் கவலைகள் அனைத்தும்
உன்னைக் கண்டவுடன் மாயமாகி
விடுகிறது அன்பே!


கல்லறையில் மறையும் போது கூட
கண்ணீர் விடமாட்டேன்
என்னோடு நீ இருந்தால்


மரணம் உன் மடியில் என்றால்
இறப்பதற்கே பிறப்பேனே
இன்னும் ஓராயிரம் ஜென்மம்


தினம் காலை பொழுதில்
உன் மடியில் என் தூக்கம்
கலைந்து எழுவதற்கு
சிறகடித்து தவிக்குதடி
என் விழிகள்!


இதழ்கள் பேச மறுத்தாலும்
இமைகள் பேசி மகிழ்விக்கிறது
உன் கடை விழிப் பார்வை போதும்
கடைசிவரை என் வாழ்க்கை வெல்லும்!


நீண்ட நெடுநாள்
பயணம் வேண்டுகிறேன்
உன் தோள் சாய்ந்து
என் நொடிகளை கடக்க


கடைசியாக ஒரு முறை
உன் மடிமீது சாயும்
வரம் கிடைத்தால், தினமும்
இறந்தும் வாழ்வேன்
உன் அருகாமையில்!


நீயே நான் என்று
உணர்ந்து கொண்டேன்
உன்னுள் முழுவதுமாகத்
தொலைந்து போன
அந்த நொடியில்!


என்னுடைய கூடுதலான ஆசை
அவள் என் கூடவே
இருக்கணும் என்பதே


எனதென்றும்
உனதேன்றும்
எதுவுமில்லை
நாம் என்றான பின்னே


ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும்
உன் தோள் சாய்ந்து
உரையாடும் சிறிது நேர
உரையாடல் போதும்


உன்னுடனான எனது சண்டைகளில்
எந்தன் ஒட்டுமொத்த வேண்டுதல்
நீ மட்டும் தானே


சின்னச்சின்ன ஊடல்கள்
நாம் பிரிவதற்கல்ல
நம் காதலை வளர்ப்பதற்கு


தனியறையில் தணலாய்
தகிக்கும் என் காதல் தீயை
முத்தமழையில் குளிர்காயச்
செய்கிறான் ஊடலில்


அவன் இட்ட
ஒற்றை முத்ததில்
என் ஒட்டு மொத்த
கோபமும் மழைத்துளியாய்
சிதறியதே!


வறுமையில் கணவனை
நேசிக்கும் பெண்ணும்
முதுமையில் மனைவியை
நேசிக்கும் ஆணும் தான்
உலகின் ஆகச் சிறந்த
காதலர்கள்


சுகங்களை மட்டும்
பகிர்ந்து கொள்வது
காதல் அல்ல, சோகங்களை
பகிர்ந்து கொள்ளும் போது
துணையாய் நிற்பது
தான் காதல்


உன்னுடன் பேசிய
நிமிடங்களை விட
எப்பொழுது பேசுவாய்
என்று ஏங்கி தவித்த
நிமிடங்களே அதிகம்


உடலுக்கு துணையாக
மட்டுமல்ல மனதுக்கு
துணையாகவும் வாழ்பவர்கள்
தான் கணவன் மனைவி


வாழ்க்கையை சந்தோசமாக
வாழ்வதற்கு ஆயிரம் உறவுகள்
தேவை இல்லை நம்மை உண்மையாக
நேசிக்கும் ஒரு உறவு போதும்


ஒரு நல்ல கணவரின்
அன்பு என்பது ஆயிரம்
தாய்களின் அன்பிற்கு நிகர்


தினம்தினம் சண்டை போடுவேன்
சில நொடிகள் கோபமாய் பேசுவேன்
ஆனால் உனக்கொரு வலி என்றால்
முதலில் கலங்குவது என் விழி தானே.


மனைவியை எங்கும்
விட்டுக்கொடுக்காத கணவன்,
கணவனிடம் எதையும்
மறைக்காத மனைவி,
நண்பர்கள் போன்ற பிள்ளைகள்,
இவையாவும் அமைந்தால்
வாழ்க்கை சொர்க்கமே.


கணவன் மனைவி நீயா? நானா?
என வாழ்க்கை நடத்துவதை விட
நீயும் நானும் என்று வாழ்க்கை நடத்தினால்
இல்லறம் அர்த்தமுள்ளதாகும்.


மனைவி வாழும்
இரண்டாவது கருவறை
கணவன் இதயம் தான்.


நான் உனக்கு
எப்படினு தெரியல
ஆனா நீ எனக்கு உயிர்.


எப்போது ஒரு பெண்
அன்பான கணவனை பெறுகிறாளோ
அப்போது அவள் தன்னை
அதிர்ஷ்டசாலியாக உணருகிறாள்


சண்டை இட்ட
அடுத்த நொடி வந்து
மன்னிப்பு கேட்பதை விட
மார்பில் சாய்ந்து கோபமா
என்று கேட்கும் துணை
வாழ்வின் பேராணந்தம்.


பெண் மனம் விரும்புவது
காசோ பணமோ அல்ல
தலை சாய்த்துக்கொள்ள
ஒரு தோளும் நடந்ததெல்லாம்
சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்.


என் காதலும்
என் கண்ணீரும்
உன் ஒருவனுக்கு
மட்டுமே சொந்தம்


ஒரு பெண்ணுக்கு
குழந்தையை கொடுப்பது
ஆண்மை இல்லை, இறுதி வரை
அந்த பெண்ணை குழந்தையாக
பார்த்து கொள்வதே
உண்மையான ஆண்மை.


நினைத்து கூட பார்க்கவில்லை
நீ கிடைப்பாய் என்று, கிடைத்தவுடன்
நினைத்து கொண்டேன்
நானும் அதிர்ஷ்டசாலி என்று.


கணவனின் சிறந்த
தோழியாக மனைவியும்
மனைவியின் சிறந்த
தோழனாக கணவனும்
இருக்கும்போது, அவர்கள்
சிறந்த தம்பதியாகிறார்கள்.


கனவுகளோடு காத்திருக்கும்
என் விழிகளுக்கு எப்போது
விருந்தளிக்கும் உன் விழிகள்


நான் உயிரோடு இருப்பது
எல்லோருக்கும் தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னோடு இருப்பது
யாருக்கு தெரியும்
உன்னை தவிர.


தொலைத்தால் கிடைக்கும்
பொருள் அல்ல
எத்தனை ஜென்மங்கள்
எடுத்தாலும் கிடைக்காத
பொக்கிஷம் உன் அன்பு!


ஆயிரம் தடவை
உன்னிடம் சண்டை இட்டு
பேசாமல் இருந்து சமாதானம்
ஆகும் போதும் ஏனோ
தெரியவில்லை புதிதாய்
காதலிப்பது போன்றே
ஓர் உணர்வு ஏற்படுகின்றது.


சண்டை, பாசம், கோபம்,
அழுகை, புன்னகை இதில்
எது என்றாலும் சம்மதம்
அது உனக்காக என்றால்.


நான் உன்னை
நேசிப்பது உன்னோடு
வாழ மட்டுமல்ல
உனக்காக மட்டும் வாழ.


நீ எனக்கு உறவாக
கிடைத்த உறவு அல்ல
எனக்கு வரமாக
கிடைத்த உயிர்.


என் வாழ்க்கையிலே
உன்ன விட யார் மேலையும்
இவ்ளோ பாசம் வச்சதே
இல்லடா புருஷா.


நேசிக்கும் பெண்ணை
அழ விடாமல் பார்த்துக்கொள்ளும்
ஆண் கிடைப்பது மீண்டும்
ஒரு தாய் கிடைப்பது போன்றது


அன்பு நிறைந்த உள்ளம் தான்
அதிகம் சண்டை போடும்
பிரிவதற்கு அல்ல
பிரிய கூடாது
என்பதற்காக


உன் மீதான என் அன்பு
ஒரு குழந்தை தன் தாய்
மீது வைத்திருக்கும்
அன்பைப் போன்றது
அதற்கு உன்னைத்
தவிர வேறொன்றும்
தெரியாதுடா.


உன்னிடம் சண்டை போடும்
இந்த இதயத்தை விட்டு விடாதே
என்னைவிட உன்னை யாரும்
நேசித்து விட முடியாது


சண்டை வந்தா சமாதானம்
பண்ணலாம் ஆனால், சமாதானம்
பண்ணவே சண்டையிடும்
என்னவன் அழகு.


எந்த உறவாக இருந்தாலும்
சின்ன சுயநலம் கலந்து இருக்கும்
சுயநலம் இல்லாமல் நம்மை
காக்கும் ஓர் உறவு
கணவன் மட்டுமே!


உரிமையை தந்து விட்டு
அன்பை வெளிப்படுத்த
மாட்டான் ஆண். ஆனால்
சின்ன சின்ன விஷயங்களிலும்
அன்பை எதிர்பார்பவள் பெண்.


நம் திருமணம் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படவில்லை. நீ என்னை
திருமணம் செய்ததால் தான்
என் வாழ்வு சொர்கமானது!


ஒவ்வொரு முறையும்
உன்னை நினைக்கும் போது
ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்க
சொன்னேன் வெளியே வந்து பார்
உன்னை எவ்வளவு முறை
நினைக்கிறேன் என்று.


தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும்
ஒரு பெண் முதலில் பார்க்க
விரும்புவது தன் முதல்
குழந்தையாகிய அவள்
கணவனையே.


இந்த ஜென்மம் மட்டுமல்ல
இன்னும் ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் எனக்கு நீ தான்
உனக்கு நான் தான்.


நீ என்னை உறவாகத்
தான் நினைக்கிறாய்
நான் உன்னை என்
உயிராகவே நினைக்கிறேன்
உயிர் இன்றி உடல்
வாழுமா சொல்?


நாம் உள்ளத்தில் நினைக்கின்ற
ஒன்றை நாம் கூறாமலே
புரிந்து கொள்ளும்
உறவுகளை நம்
வாழ்வில் பெறுவது
வரமே!


ஆண் எதிர்பார்ப்பது தன்மீது
அன்பாயிருக்கும் மனைவியை
பெண் எதிர்பார்ப்பது தன்மீது
மட்டும் அன்பாயிருக்கும் கணவனை.


ஒரு கணவன்
தன் மனைவிக்கு
விலை உயர்ந்ததாக
எதையாச்சும் கொடுக்க
நினைத்தால் தினமும்
மனைவிக்காக கொஞ்சம்
நேரம் ஒதுக்கி அன்பா
ஆதரவா அரவணைப்பா
பேசுங்கள்.


தேவதையை போல எனக்குள்ளே
அவள் வந்தாள் நெடுந்தூர
பயணத்தை தொடங்கி
வைத்தாள்.


இரு உயிராய் நாங்கள் பிரிந்து
இருந்தாலும் என்னாளும் எனை
விட்டு அவள் பிரிந்து
இருக்க மாட்டாள்
என் அன்பு மனைவி.


தாயின் அன்பு வளரும் காலமே
மனைவியின் அன்பு நெடுந்தூர
பயணம் மனதில் தொய்வு
என்பதே இல்லை.


நான் உண்ட பின்பு
அவள் உண்டு தினம் கழிப்பாள்
அவள் நேசம் நான் தான் என்று
எனக்குள்ளே ஒழிந்து இருப்பாள்
என் உயிராக!


துன்பங்களைத் தாங்கும்
மருந்தாகவும் இன்பங்களை
வாரி கொடுக்கும் இணையாகவும்
கிடைத்த உறவு மனைவி மட்டுமே.


புன்னகை பூ போல
சிரித்து என்னை அரவணைப்பாள்
ஆசைகளை எல்லாம் அடி நெஞ்சில்
ஒளித்து வைப்பாள் எனக்காக மட்டுமே.


வெளியில் முறைப்பதும்
உள்ளுக்குள் அணைப்பதும்
கணவனின் உண்மையான
அன்பால் மட்டுமே.


தினம் ஒரு படிகளை
சிறுக சிறுக கட்டி வைத்தாள்
அதில் என்னை நடக்க வைத்து
சிகரத்தை தொட வைத்தவள்
என் மனைவி.


வயதுகள் நூறு கடந்தாலும்
தலை முடி நரைத்தாலும்
கணவன் மனைவி பந்தத்தில்
முளைத்த அன்புக்கு மட்டும்
வயதுகள் என்பதே கிடையாது.


எத்தனை கனவுகள்
எனக்குள்ளே முளைத்தாலும்
தடை போடாமல் என்னை
எப்பொழுதுமே கை கொடுத்து
நிற்க வைப்பான் என் கணவன்.


நம்மிடம் எதையும் எதிர்பார்த்து
இருப்பதில்லை மனைவியின் உறவு
அன்பை மட்டும் கொடுத்தால் போதும்.


என் தாய்க்கும்
என் மனைவிக்கும்
வேறுபாடு தெரியவில்லை
இரண்டு இதயமும் எனக்காக
வந்த தெய்வங்கள் தான்
என நினைக்கிறேன் நான்.


நோய் என்று படித்தால்
உன் வழியாகவும் துன்பம்
என்று வந்தால் அதைத் தாங்கும்
இதயமாகவும் உன்னை தாங்கிப்
பிடித்தவள் மனைவி மட்டுமே.


கோபப்பட்டு நான் பேசினாலும்
குழந்தை போல் அடுத்த நிமிடமே
மாறிவிடுவாள்!


தந்தையின் அன்பு போல
கணவனின் அன்பு உண்மையானது
மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற
துடிப்பவன் கணவன் மட்டுமே.


வடதுருவம், தென்துருவமாய்
தாங்கி என்னை பிடிப்பவன்
என் நிழல் போல எப்பொழுதும்
கூடவே நின்று கடவுளாக
எனை காப்பவன் என் கணவன்!


கருவறையை சுமக்கும்
தாய் போல அவள் நெஞ்சில்
எனை சுமந்தாள், ஆயுள் வரைக்கும்
என்னை சுமக்க பல
தியாகங்களையும் விட்டாள்
என் ஆருயிர் மனைவி!


அவள் உதிரத்தில்
முளைக்காத பூவாக
நான் இருக்கலாம்
என்னாளும் எனை
வேற்றுமையாய் அவள்
பார்த்ததே இல்லை!


கேட்காமல் கொடுப்பது
தந்தையின் குணம்
எதையும் யோசிக்காமல்
செய்வதை கணவனின்
மனம் இவை இரண்டு
உறவுகளுக்கும் வேறுபாடுகள்
இல்லை.


எத்தனையோ பாரங்களை சுமந்து
அத்தனையும் சுகங்களாக மாற்றி
தன்னையே தொலைத்து
நிற்பவள் மனைவி மட்டுமே.


உன் நிழல் கூட
உன்னை விட்டு பிரியலாம்
உன் உடல் கூட மண்ணைவிட்டு
மறையலாம் ஆனால் உன்
மனைவியின் எண்ணங்கள் மட்டும்
உன்னை விட்டுப் பிரியாது.


என் காதலை பத்திரமாய்
சேமித்து வைக்கிறாய் நீ
கொஞ்சமாய் செலவு செய்
மீண்டும் நிரப்ப நான்
காதல் தருகிறேன்!


நீ உறங்கும் நேரத்திலும்
உன்னை ரசித்து பார்த்திருப்பேன்
நான் விழித்திருக்கும் நேரத்திலாவது
என் முகம் காண்பாயா நீ


பிரிந்து செல்கிறேன் என்று
சொல்லாதே திரும்பி வருகிறேன்
என்று சொல் உனக்கான
என் ஆயுள் முழுவதும்
காத்திருப்பேன்.


ஆளுதல் என்ற வார்த்தையின்
பொருள் தெரியாமல் என்னை
ஆட்சி செய்பவள் நீ!


உன் தோளில் அழகாய்
உறங்கி கொண்டிருக்கும் நம்
குழந்தைக்கு தெரியுமா?
நான் தான் உன்
முதல் குழந்தை என்று!


உன் முதல் பார்வை
உன் முதல் புன்னகை
உன் முதல் ஸ்பரிசம்
உன் முதல் சப்தம்
உன் முதல் அணைப்பு
இவை எல்லாம்
மீண்டும் பூக்க செய்தது
என் பெண்மையை!


என்னையும் வெட்கப்பட
வைத்துவிட்டாய் உன் காதல்
மொழியால்!


உன்னை மட்டுமே
கேட்கும் இதயத்திற்கு
உன்னை தவிர எதை தருவது ???


உன்னோடு நான் காணும்
மொட்டை மாடி மாலை நேர தேநீர்
இரவு நிலா இவை இல்லாத
நாட்களே வேண்டாம் எனக்கு!


நீ என் கவிதைகளை
வாசிக்கும் அழகிற்கே
ஆயிரம் கவிதை எழுதி
விடுவேன் நான்!


என்னையும் என்
உலகத்தையும் முழுவதுமாக
திருடிச்சென்றவள் நீ.


காதலை சொல்ல தாமதப்படுத்தாதே
காதலும் கவிதையுமாய் நிரம்பி வழிகிறது
என் இதயம் சேமிக்க இடம் இல்லை
நீ இதயம் தந்து உதவி செய்!


நீ காதலோடு தந்த தேநீரின்
ருசியை உன்னோடு அமர்ந்து
அருந்தும்போது தான்
உணர முடியும்!


உன் இதய சிறையில்
இருக்கும் என்னை விடுதலை
செய்யாதே, உன்னுள் அடைபட்டு
கொண்டிருக்கவே ஆசை படுகிறது
என் காதல்.


உன் விழியீர்ப்பு விசைக்கு
விளக்கம் தர உன்னால்
ஈர்க்கப்பட்ட என்னை தவிர
வேறு யாரால் முடியும்?


நான் கை கோர்க்கும்
நண்பனாகவும் நீ
நான் தோள் சாயும்
கணவனாகவும் நீ!


வெட்கம்... நான் எவ்வளவு தடவை
மறைத்து வைத்தாலும்
துள்ளி வெளியே வருகிறது
உனை பார்த்ததும்.


செய்தி வாசித்து
நாட்கள் ஆயிற்று
உன்னில் வசிக்க
தொடங்கிய பிறகு
உன்னை தவிர வேறு
உலகம் கிடையாது எனக்கு!


நீ புன்னகை காட்டி
நடந்து வரும் வீதியெங்கும்
உள்ள பூக்கள் கூட
தலை கவிழ்ந்து கொள்ளும்
உன் இதழ்களோடு
போட்டியிட முடியாமல்!


இன்னொரு குழந்தை பிறந்தாலும்
உன்னை சொல்லியே
அவனை ரசிப்பேன்
நீ எனக்கு கிடைத்த
முதல் வரம்.


உனக்கு பிடிக்கும்
என்றால் மாறிடுவேன்
நீ கொஞ்சும் பொம்மையாக!


உன் கன்னக்குழி அழகில்
விழுந்து கிடக்கிறேன் நான்!


நீ என்னை பார்க்கும் போதெல்லாம்
காதல் மழையில் நனையும்
சிறு குழந்தையாகி
விடுகிறேன் நான்.


என் அதிகாலை உறக்கம்
உன் விழிகள் பார்த்த
பின்பு தான் கலையும்.


புதிதாய் உணவு நீ சமைக்க
காதலோடு நானும் அதை ருசிக்க
அறுசுவையில் ஒன்று
கூடிப்போனது உன்னால்!


எவ்வளவு பெரிய துன்பங்களையும்
உன் புன்னகையால் விழுங்கிவிடுகிறாய்!


சண்டைபோடு பேசாமல் இரு
நிதானமாக யோசித்துப்பார்
உன்னுள் இருப்பது
என் காதல் மட்டுமே!


ஒருமுறை உன்னை
கருவில் சுமக்க ஆசை
உன் மனைவியாக மட்டுமல்ல
உன் தாயாகவும்.


நொடி நொடியாய்
காதல் செய்யும்
என் காதல்
உன் மீது
மட்டுமே.


உதிர்ந்த மலரையும்
பசுமையாக வைத்திருக்கிறது
இந்த நிலம், அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்தால்.


பறந்து செல்ல
சிறகுகள் தேவையில்லை
உன் காதல் ஒன்றே போதும்.


அன்பு, அழுகை,
அரவணைப்பு கலந்து
தரும் காதலன் தான்
இன்று என் கணவன்!


துணை என்பது
என்னோடு நிற்பவன் அல்ல
எனக்காகவே நிற்பவன்!


அன்பு யார்மீது
வேண்டுமானாலும்
காட்டமுடியும் ஆனால்
கோபம் உரிமை உள்ளவர்
இடத்தில் மட்டுமே காட்டமுடியும்


உயிராய் உணர்வால்
என்னோடு கலந்து விட்ட
உன்னை உடலால் மட்டுமே
பிரிந்து செல்ல முடியும்


இன்பத்திலும் துன்பத்திலும்
மனம்விட்டு பேச துணை
இல்லாதபோது தான்
தெரியும் உண்மையான
அன்பின் பெருமை


என் அதீத ஆசையெல்லாம்
என் மனம் கஷ்டப்பட்டும் போது
என் வார்த்தையை கேட்க
ஓர் துணை வேண்டும் என்பதே