உழைப்பாளர் தின கவிதைகள் - Labour Day Wishes in Tamil

Collection of Labour's Day wishes in Tamil, Labour day wishes for WhatsApp in Tamil, Uzhaipalar thina vaazthukkal, Uzhaipalar thina vaazthu, Uzhaipalar kavithai, may 1 kavithai

உழைப்பாளர் தின கவிதைகள் - Labour Day Wishes in Tamil
உழைப்பாளர் தின கவிதைகள்
  • May 1 Kavithai
  • May 1 Uzhaipalar thinam kavithai
  • Ulaipalar dhinam kavithaigal
  • May Day quotes
  • மே 1 கவிதைகள்
  • உழைப்பாளி கவிதைகள்

வியர்வை சிந்தும் கரங்கள்
உயரட்டும் நாளைய உலகை
இனிதே ஆளட்டும் இனிய
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


கடின உழைப்பிற்கு
மாறாக இந்த உலகத்தில்
எதுவுமே ஈடு இல்லை
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


May 1 Kavithai

உழைப்பும் அர்ப்பணிப்புமே
நம் நாட்டை கட்டமைக்கிறது
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்போம்!
உயர்வோம்!
இலக்கை அடைவோம்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உதிரத்தை உழைப்பாக்கி
உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை
உள்ளத்தால் வணங்குவோம்
அனைவருக்கும் இனிய
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


நீ விதைத்த வியர்வைகள்
தான் கல்லாய் கிடந்த இந்த
பூமிப்பந்தை கர்ப்பம் தரித்து
உயிர்ப்பிடித்திருக்க வைத்துள்ளது
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைக்கும் இனமே
உலகை ஜெயிக்கும்
ஒரு நாள் விழித்து இருந்தால்
விரைவில் வருமே அந்த திருநாள்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உலக தொழிலார்களே
ஒன்று படுங்கள் உலக
தொழிலாளர்கள் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


ஒரு தொழிலாளி மற்றும்
ஒரு படைப்பாளி ஒவ்வொரு
தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பு இல்லாமல் இங்கு
எதுவும் உருவாகாது உழைப்பால்
தான் இந்த உலகமே உருவானது
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


  • May 1 WhatsApp status in tamil
  • May 1 WhatsApp kavithai
  • Happy labour day wishes in tamil
  • Happy May Day wishes in tamil

உலகம் முழுவதும் உழைக்கும்
தொழிலாளர்கள் தங்களது
உரிமைகளை வென்றெடுத்த
நாளை கொண்டாடுவோம்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


தொழிலாளர்கள் வருடத்தில்
ஒரு நாள் மட்டுமே நினைத்துப்
போற்றப்பட வேண்டியவர்கள்
அல்ல வருடம் முழுவதும்
பாராட்டப்பட வேண்டியவர்கள்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


நம் தேசத்திற்காக உழைக்கும்
அனைவருக்கும் நன்றி
தெரிவிக்க இந்த நாளை நாம்
பயன் படுத்திக்கொள்வோம்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்



நம் தேசத்தை உருவாக்கிய
உருவாக்கி கொண்டிருக்கும்
ஒவ்வொரு தொழிலார்களுக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


உழைப்பே உலகின்
இயக்கு விசை உலக
தொழிலாளர்களுக்கு
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பே உலகின் மூலதனம்
மூலதனத்தின் முதலாளி உழைப்பாளி
உலக உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பு உயிர்
வாழ்தலின் அடிப்படை
இனிய தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உலகின் முதல்
கடவுள் உழைப்பாளியே
உலகை உருவாக்கிய
கடவுளுக்கு உழைப்பாளர்
தின வாழ்த்துக்கள்


உணவும், உயிரும் உழைப்பாளியின்
கையிலே உங்களை சுற்றி
இருக்கும் உழைப்பாளிகளை
மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


அயராது உழைத்துக்
கொண்டிருக்கும் அனைத்துத்
தொழிலாளர்களுக்கும்
தொழிலாளர் தின வாழ்த்துகள்


உழைப்பின் வாசம் வியர்வையை
துடைக்கும் விரல்களுக்கே தெரியும்
தொழிலாளர் தின வாழ்த்துகள்


களைப்பின்றி உழைத்து மரம்
போல தழைத்து பசியாற்ற
பணி செய்யும் உழவோர்க்கு
தொழிலாளர் தின வாழ்த்துகள்


வெளியில் உழைக்கும்
ஆண்களுக்கும் வீட்டில்
உழைக்கும் பெண்களுக்கும்
உழைப்பாளர்கள் தின நல்வாழ்த்துகள்


இலவசம் வேண்டாம்
எங்கள் உழைப்பிற்கு
உரிய வேலையையும்
உரிய மரியாதையும்
உன்னத கூலியும் போதும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


வியர்வை, இரத்தம், கண்ணீர்
கூட சிந்தி வீட்டுக்காகவும்
நாட்டுக்காகவும் உழைக்கும்
அனைத்து உழைப்பாளிகளுக்கும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


இன்று நாம் கடந்து
செல்லும் கடினமான
பாதை தான் நாளை நாம்
பெறப் போகும் வலுவான
வெற்றியின் ஆரம்பம்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


மகிழ்ச்சி வேண்டும் என்றால்
பிறர் விரும்புவதை செய்
வெற்றி வேண்டும் என்றால
நீ விரும்பியதை விரும்பி செய்
மே தின வாழ்த்துக்கள்


இன்று வரை உழைத்து கொண்டே
இருக்கும் உழைப்பாளிகள் என்றால்
அது நம் அப்பாக்கள் தான்
அவர்கள் வியர்வை சிந்தி
உழைத்து தான் நம்மை
வியர்வை வராத வேலைக்கு
செல்ல வைத்திருக்கிறார்கள்


கடின உழைப்பு ஒருநாள்
பலன் தரும் அதற்கான
காத்திருப்பு ஒரு நாள்
வெற்றி பெறும்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உதிரத்தை உழைப்பாக்கி
உலகத்தை உயர்த்திடும்
உண்மை தொழிலாளியை
உள்ளத்தால் வணங்குவோம்


உழைப்புக்கு ஓய்வு
கொடுத்துவிட்டு விடியலை
கண்டு விடமுடியாது
நம்பிக்கையோடு உழைத்தால்
வெற்றி நிச்சயம்
அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்


தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
மே தின வாழ்த்துக்கள்


வேர்வை சிந்தும் கரங்கள்
உயரட்டும் நாளைய உலகை
இனிதே ஆளட்டும்
மே தின வாழ்த்துக்கள்


முயன்றால் முடியாதது இல்லை
முயற்சிப்போம் முடிவுக்காக அல்ல
நம் முன்னேற்றத்திற்காக
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


கல்லுடைப்பவர் முதல் கணினி
தட்டுபவர் வரை இருக்கும்
அனைத்து தொழிலாளர்களுக்கும்
இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்


வீட்டை உயர்த்திட
நாட்டை வளர்த்திட
இன்று உழைத்திடும்
உன்னதக் கரங்களே
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


நாம் வாழ்வதே இவர்களின்
வியர்வையில் தான்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உடலினை இயந்திரமாக்கி
உழைப்பினை உரமாக்கி
உலகத்தை இயங்க வைக்கும்
உன்னத தோழர்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்


உழைப்போமே !
உயர்வோமே !
இலக்கை அடைவோமே !
மே தின வாழ்த்துகள்


வரலாற்றின் அரிய
பொக்கிஷங்கள் பல்
உழைப்பாளிகள்
என்ற உளியால்
செதுக்கப்பட்டவை
மே தின வாழ்த்துக்கள்


தனக்கென்று சேமிக்காமல்
தன் குடும்பத்திற்காக
ஓய்வின்றி உழைக்கும்
ஒவ்வொரு அம்மாவிற்கும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்


உழைப்பாலும் உறுதியாலும்
இந்த மண்ணை மகத்தான
பூமியாக மாற்றுவோம்
உழைப்பால் நாட்டை
பெருமைப் படுத்துவோம்
மே தின வாழ்த்துகள்


கடின முயற்சி ஒரு
போதும் உங்களை
தோல்வியடையச் செய்யாது
மே தின வாழ்த்துகள்


உங்கள் வாழ்க்கையில்
மகிழ்ச்சி, வெற்றி,
செழிப்பு பெருகட்டும்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உலகம் முழுவதும் எத்தனையோ
இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்ட
தொழிலாளர்களின் வலிக்கு
மருந்து போடும் நன்னாள்
தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்


மனிதகுலத்தை உயர்த்தும்
அனைத்து உழைப்பிற்கும்
கண்ணியம் உண்டு
அவை சிறப்போடு
மேற்கொள்ளப்பட வேண்டும்
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உலகெங்கும் தொழிலாளர்
உண்டு அவர் உயர்வுக்கு
வழி செய்தல் நன்று
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


தொழிலாளியின் வியர்வை
தங்கத்தை காட்டிலும் மதிப்பானது
வைரத்தை விட ஜொலிப்பானது
முத்தை விட அழகானது
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உலகின் படைப்புக்கள்
எங்கள் உழைப்பெனும்
உளியால் செதுக்கபட்டவை
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்


உழைத்துக் களைத்தறியா
விவசாயத் தோழனே
உன்னுழைப்பால் உலகமே
பசியாறுகிறது
உன்னுழைப்பால் உலகமே
ஆடை அணிகிறது


திறமை மிகச் சிறந்த
படைப்புகளை ஆரம்பிக்கின்றது
உழைப்பு மட்டுமே
அவற்றை முடிக்கின்றது
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


கடின உழைப்பைத்
தவிர ஒரு கனவு
கூட நனவாகாது


உழைப்புதான் உச்சிக்கு
உயர்த்தும் படிக்கட்டு
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பும் பொறுப்புமே
உண்மையான செல்வம்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பின் மூலம் தான்
உலகம் ஒளிர்கிறது
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


மெய்யான உழைப்பு
என்பது எல்லா
செயல்களின் தூய்மை
மே தின வாழ்த்துகள்


ஒவ்வொரு கனியும்
ஒரு உழைக்கும்
கைகளின் விளைவு
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


மிகையான உழைப்பு
இன்றி மேன்மையான
சாதனைகள் இல்லை
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


தூய உழைப்பில்
தனி மகிழ்ச்சி
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பு என்பது
மனித உயிரின் அழகு
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


கடின உழைப்பு
என்பது வெற்றியின்
முக்கிய விசை
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


ஏழ்மை என்ற நோய்
அகல வேண்டுமானால்
உழைப்பு என்ற
மருந்தைக் கொடு
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உழைப்பால் இந்த உலகத்தை
உருவாக்கிய உழைப்பாளர்களுக்கு
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


மூளையை இயந்திரமாக்கி
உழைப்பை உரமாக்கி
வெற்றியை உரித்தாகும்
தொழிலாளர்களுக்கு
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


நீங்கள் நேசிக்கும்
வேலையை உங்கள்
வாழ்வில் செய்யுங்கள்
உங்கள் வாழ்க்கை
உங்களை நேசிக்கும்


நீ செய்யும் தொழிலுக்கு
நீ முதலாளி இல்லையானாலும்
உன் வாழ்க்கைக்கு
நீ முதலாளியடா


வலியால் உன்
உடல் தேயந்தாலும்
உன் உழைப்பு
எப்பொழுதும் தேயாது
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


உன் உழைப்பால் இந்த
உலகை தாங்கு இந்த
உலகம் உன்னை
தலைமேல் வைத்து தாங்கும்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


உன் உழைப்பால் நீ சிந்தும்
ஒரு ஒரு துளி வியர்வையும்
உன் வாழ்க்கைக்கு நீ
போடும் விதையடா
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


பாதை இல்லாமல்
பயணம் இல்லை
உழைப்பில்லாமல்
ஊதியம் இல்லை
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


நேரம் பாக்காமல்
உழைக்கும் ஊழியர்களை
ஊட்டுவிக்கும் நாள் இது
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


வெற்றியோ தோல்வியோ
முக்கியமல்ல உன்னால்
முடிந்தவரை போராடு
உன் உழைப்பால்
நீ உயர்வாய்
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


தோல்வி இல்லாத
சாதனையார்களும் அல்ல
வெற்றி இல்லாத
உழைப்பாளிகளும் அல்ல
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்


எந்த சூழ்நிலையாக இருந்தாலும்
தன் கடமையை
நிறைவேற்றுபவனே
உண்மையான உழைப்பாளி
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்