மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் - Mattu Pongal Wishes in Tamil

Mattu Pongal kavithai, Mattu pongal wishes in tamil, Mattu pongal kavithai in tamil, Mattu pongal whatsapp status, Jalli Kattu Kavitai, Jalli kattu wishes

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் - Mattu Pongal Wishes in Tamil
  • Mattu Pongal kavithai
  • Mattu pongal wishes in tamil
  • Mattu pongal kavithai in tamil
  • Mattu pongal whatsapp status
  • Jalli Kattu Kavitai
  • Jalli kattu wishes
  • Pongal kavithai

உழவனுக்கு மட்டும் அல்ல
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு
பிறகு உலகுக்கே நீ
செல்லப்பிள்ளை தான்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


தாய் கூட சில மாதங்கள்
தான் எனக்கு பால் ஊட்டினாள்
ஆனால் நான் இருக்கும் வரை
எனக்கு பால் கொடுக்கும் நீ
என் தாயினும் சிறந்தவள்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


கலைப்பறியாது உழைக்கும்
உனக்கு தலை வணங்கி
நன்றி கூறுகிறேன்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


மாடுகளின் அழகினை
கவிதையில் வர்ணிக்கலாம்
ஆனால் உழைப்பை
வர்ணிக்க ஓராயிரம்
கவிதை போதாது
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


மண் வாசனையோடு
ஏர் கலப்பைகளை சுமந்து
நாம் இன்பமாய் உணவுண்ண
விவசாயிக்கு தோள் கொடுக்கும்
எருதுகளை போற்றுவோம்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


விவசாயத்தின் தோழனாய்
உழவனின் தொண்டனாய்
வீரத்தின் அடையாளமாய்
விளங்கும் மாடுகளுக்கு
நன்றி செலுத்துவோம்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


உழவனின் நண்பனுக்கு
நன்றி சொல்லும் நாள்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


எண்சாண் உடலின் ஒரு சாண்
வயிற்றுக்கு தடையின்றி
உணவு கொடுத்த உழவுக்கும்
உழவுக்கு உதவிய மாட்டுக்கும்
நன்றி சொல்லும் திருநாள்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


அன்பின் ஒவ்வொரு நிறமும்
உங்கள் வீட்டையும் இதயத்தையும்
நிறைய மகிழ்ச்சியுடன் நிரப்பட்டும்
அனைவருக்கும் இனிய
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மாட்டுப் பொங்கல் கடவுளுக்கு
நன்றி செலுத்துவதற்கும்
பிரார்த்தனை செய்வதற்கும்
ஏற்ற நாள் ஆகும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இது உழவர்களின் தோழனை
கொண்டாடும் திருநாள்
அனைவருக்கும் இனிய
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


நம் பாரம்பரியமான விலங்குகளான
மாடுகளை போற்றிப் பாதுகாப்பது
பாரத தேசத்தில் பிறந்த
ஒவ்வொருவரின் கடமையாகும்
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சாதி மத பேதமின்று அணைத்து
மதங்களை சார்ந்தவர்களும்
கொண்டாடும் ஒரு அற்புத
திருநாளே பொங்கல்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


மாட்டுப் பொங்கல் பண்டிகையை
கண்கவர் ஆடை அணிந்து
வீட்டை அலங்கரித்து விருந்து
படைத்து கொண்டாடுங்கள்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


தமிழர்களின் வீரம் போற்றுகின்ற
ஜல்லிக்கட்டு தமிழா வீரத்தால்
அதை நீ வென்று காட்டு
இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


சிங்கத்தை போல் சீறி
வரும் காளையினை சிங்கமென
பாய்ந்து அடக்குகின்ற
காளையர்களுக்கு மாட்டுப்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வீரத்தமிழர்களுக்கு
மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!


வீரத்தின் அடையாளமாய்
விவசாயத்தின் தோழனாய்
ஏழைகளின் தெய்வமாய்
உழவனின் தொண்டனாய்
விளங்கும் பசு மற்றும் மாட்டின்
பண்டிகையாம் மாட்டு பொங்கல்
மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மனிதனுக்கு பால் கொடுத்து
மனிதனுக்கு தோள் கொடுத்து
இல்லை இல்லை மனிதனுக்கு
தன்னையே கொடுத்து
மாண்டு போவது மாடு
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தனித்த மௌனங்கள்
உழவன் நண்பனுக்கு
கவிதையால் ஒரு மரியாதை
பொங்கலோ பொங்கல்!


உழைத்து களைத்த உழவர்களுக்கு
ஒருநாள் உழவர் திருநாள்
உழைத்து களைத்த உனக்கும்
ஒரு நாள் மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழவனின் பிரியமான
தோழனுக்கு பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
மாட்டு பொங்கல்!!


தாய்ப்பால் அருந்தாமல்
வளர்ந்தவர் பலர்
பசும் பால் அருந்தாமல்
வளர்ந்தவர் இலர்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்