அன்னையர் தின கவிதைகள் - Mother's Day Kavithai
Collection of Mother's Day wishes in Tamil, mother's day wishes for WhatsApp in Tamil, amma thina vaazthukkal, annaiyar thina vaazthu, amma kavithai
- Mother's Day wishes in tamil
- Mother's day kavithai
- Amma whatsapp status
- Mother's day whatsapp kavithai
- Amma kavithai for status
ஓயாமல் உழைக்கும் அன்னைகளுக்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
உதிரத்தை உணவாக்கி
உழைப்பை மூலதனமாக்கும்
தந்தையுமான தாய்களுக்கு
அன்னையர் தின வாழ்த்துக்கள்
உலகின் முதல் அறிமுகம்
அறிவின் முழு உருவம்
அன்பின் ஆதி ஊற்று
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
உலகில் உள்ள
ஒவ்வொரு அன்னையருக்கும்
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!
தாய்மையின் வலி
என்னவென்று எனக்கு தெரியும்
அதனால் தான் அம்மாவுடன் சேர்ந்து
நானும் அழுதேன் நான் பிறக்கையில்
அன்னையர் தின வாழ்த்துக்கள்
வார்த்தைகளை இல்லாத வடிவம்
அளவுகளே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பே காட்டாத முகம்
அம்மா மட்டும் தான்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
பத்து மாதம் சுமந்தாய் வயிற்றில்
பல வருடங்கள் சுமந்தாய் வாழ்வில்
இனி என்றுமே சுமக்க நினைக்கிறன்
இனிய அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள்
மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என் அம்மா காலில் மிதி பட அல்ல
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான் சுமப்பதற்காக
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
மயிைல் நனைந்த என்னை
எல்லோரும் திட்டிய போது
தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவன் அம்மா
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
படைத்தவன் கடவுள் என்றால்
என் தாயே எனக்கு முதல் கடவுள்
மழலையாக அவளை வலம் வந்தேன்
என்னவள் கண்கள் சிவக்க
என்னை துயில் கொள்ள செய்த
என் தேவதை...
கோவிலுக்கு செல்லாமல்
கைக்கூப்பி வணங்காமல்
உன் ஆசையை
நிறைவேற்றும்
ஒரு தெய்வம்
அம்மா
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
தோளிலும்,மார்பிலும்
சுமப்பவள் தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்
உருவம் அறியா கருவிலும்
எனைக் காதல் செய்தவளே
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
இந்த உலகத்தில்
பெற்ற தாயை விட
பெரிய சக்தி
வேறு எதுவும் இல்லை
உன்னுயிர் போகும் வேளையில்
என்னுயிர் உன்னுடன் போகாதா!
இல்லை என்னுயிர் போகும் வரை
உன்னுயிர் என்னுடன் வாராதா
நம்மிடம் எவ்வளுவு சொத்து இருந்தாலும்
அம்மாவுக்கு நாம்தான் மிகப்பெரிய சொத்து
செய்த குற்றங்கள் அனைத்தையும்
மன்னிக்கும் ஒரே கடவுள் அம்மா
கோடி உறவு அருகில் இருந்தாலும்
அம்மாவை மிஞ்சின உறவேதும்
உலகில் இல்லை
உலகில் தேடி தேடி அலைந்தாலும்
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்
தாயின் கருவறை