மழை கவிதைகள் - Rain Kavithai in Tamil
Collection of Rain Quotes in Tamil, WhatsApp Rain Status, Mazhai Kavithai, Rainy quotes in Tamil, Rain Status in Tamil
- Rain kavithai in tamil
- Mazhai Kavithai in Tamil
- Rain Quotes in Tamil
- Mazhai Quotes in Tamil
குடை பிடித்து எதிர்தவர்களின்
பாதங்களையும் குளிர்வித்து
செல்கிறது மழை
மழையை ரசிப்பதாய்
நினைத்துக் கொள்கிறாய்
நீ உன்னை ரசிப்பதற்காகவே
உருகி வருகிறது மழை
நனைதலில் அல்ல
உணர்தலில் இருக்கிறது
மழை
எத்தனை முறை இறங்கி
வந்து தலையில் கொட்டு
வைத்து மழை பாடம்
எடுத்தும் பிடிவாதங்களை
இறக்கி வைக்க மறுத்தலைகிறோம்
முகம் கழுவியது மேகம்
சுத்தமாகியது பூமி
அடர்ந்த மரங்களிடை செல்லுங்கள்
கிளைகள் நெளித்தாலும்
இலைகள் சிலிர்த்தாலும்
மழை நின்ற பின்னும்
மழை நீரில் குளித்திடலாம்
வானம் வெட்டும் மின்னல்
தாளம் தட்டும் ஜன்னல்
இடிகள் இசைக்க
துளிகள் தெறிக்க
சிலுசிலுவென பொலிகின்றாய்
சிறு துளியாய் விழுகின்றாய்
மழையே நான்
நனைக்கிறேன்
உன் சாரலில்
துடிக்கிறேன்
உன் தூரலில்
சிறகில்லாமல் பறக்கிறேன்
கவலை இருந்தும் சிரிக்கிறேன்
உன்னை பார்த்ததால்
உன் வருகைக்கும் முன்னே
குளிர் காற்றை அனுப்பி
மண் மட்டுமல்ல விவசாயிகளின்
மனங்களையும் குளிர்
அடைய செய்தாயே
மழைத்துளி இசையால்
மனம் காகித கப்பல்
போல் மிதக்கும்மே
ஆயிரம் கவலைகள்
இருந்தாலும் உடனே
என்னை விட்டு
விலகி செல்லுமே
பூமிக்கு நீ தந்த
வருகையால் மலர்ந்தது
மலர்கள் மட்டுமல்ல
மக்கள் மற்றும்
விவசாயிகளின்
மனமும் தான்
உன் சின்ன தூறல்
இசைகேட்டு உன்
செல்ல மழையின்
குரல் கேட்டு உன்னில்
இன்று விழிக்கிறேன்
உருமி மேளம் இடி
முழங்கி வரவேற்ப்பை
தருகிறாய் வாசல் வந்து
வரவேற்றால் கண்டு
கொள்ளாமல் போகிறாய்
வண்ண வண்ண கலர்
பூசி வானவில்லாய்
ஒளிகிறாய் வையகத்திற்கும்
உயிர் தந்து உன்னை
நீயும் இழக்கிறாய்
மெல்ல மெல்ல கரைகிறேன்
உன் மழை பொழிவாள்
நீ செல்ல செல்ல
உறைகிறேன் நீ போனபின்
அடிக்கும் குளிர் காற்றால்
ஏன் வந்தாய்?
ஏன் சென்றாய்?
புரியவில்லை
உன் இன்ப சாரலில்
நனைகையில்
கார்மேக கூந்தல் கொண்டு
கட்டி அணைக்க நீ வந்தாய்
சற்று நிமிடம் ஆடிப்போனேன்
உந்தன் மழைத்துளி பட்டதும்
மழையில் நனைவது
அதைவிட அழகு
மழையின் இடையே
வெயில் பேரழகு
மழையில் குழந்தையின்
காகித கப்பல் அழகு
மழைக்குப்பின் மண்வாசனை
அற்புதமான அழகு
மழை இரவின் குளிர் அழகு
மொத்தத்தில் மழையே
ஒரு அற்புதமான அழகு
மழையே உன் வருகையால்
எண்ணற்ற மகிழ்ச்சிகள்
விவசாயின் மனதிற்குள்
பெருக்கெடுத்து ஓடுகிறது
கார்மேக தோட்டத்தில்
பூத்த கண்ணாடிப் பூவே
காற்றில் பறந்து என்
மீது விழுந்தாயோ
விண்ணில் தோன்றும்
முத்துக்களே மண்ணில்
விழுந்த வித்துக்கலே
கொட்டும் மழையை
நீ கொட்டும் அழகை
ரசிக்க ஒரு யுகம் போதுமா?
அகத்துக்கு மகிழ்ச்சியும்
புரத்துக்கு குளிர்ச்சியும்
தருவாய் நீ
காகிதக் கப்பல் விட்டு
மழையில் ஆடியதும்
கருப்பட்டி காப்பியை
கடும் மழையில் தேடியதும்
பல காலங்கள்
ஆனாலும் மறப்போமா?
மாதம் மும்மாரி மழை
பொழிந்த காலம் போச்சு
திரைப்படங்கள் கூட இன்று
மழை காட்சியை மறந்து போச்சு
உன்னை ரசிக்கத் தெரிந்த
என்னை உரசிப் பார்க்க
வந்தாயே தொட்டு சென்ற
நீ உன் குளிர்ச்சியை மட்டுமே
விட்டு சென்றது ஏனோ
குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன்
நெருங்கி நீயும் வந்தால்
நெஞ்சமெல்லாம் பரவசமாய்
ஆகுதே உன்னிடமே
தஞ்சம் பெற்று சரிந்து
போனேன் உன் இதயத்தில்
மஞ்சள் நிற வெயில்
கூட உன்னை பார்த்து
மறைகிறது உன் மீது
உள்ள பயத்தால் தான்
சூரியனும் கரைகிறது
உச்சி முதல் பாதம்
வரை எனை உரசி
ரசிக்கிறாய் தூர நின்று
நான் பார்த்தால் ஊத
காற்றாய் பாய்ச்சுகிறாய்