தமிழ் காதல் கவிதைகள் - Tamil Kadhal Kavithaigal
Collection of Best Tamil Kadhal Kavithaigal, Kadhal SMS, Tamil Kadhal SMS, Tamil Kadhal Kavithai for your loved ones
- Tamil Kadhal kavithai
- Whatsapp kadhal
- Insta kadhal
- Kavithai in tamil
- Love kavithai
- Tamil Love SMS
- Tamil love kavithai
உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம்
வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட
காதல் ஒரு கதைப்புத்தகமாக இருந்தால்,
முதல் பக்கத்தில் சந்திப்போம்
வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
உங்களின் காதலை கண்டுபிடிப்பதுதான்
உன்னை வர்ணிக்கும் போது
கவிதை கூட வெட்கப்படுகிறது
உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
உதட்டு சாயத்தை கலைத்த அவனே அதை
மீண்டும் முத்தத்தால் மீட்டு தா.
என் கூட்டில் உன் சூட்டின் கதகதப்பும்
என்னாளும் வாழ்ந்திடவே நினைக்கிறேன்
பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்
உலக அதிசயங்கள் எல்லாம் கல்லால் ஆனவையடி
இல்லையேல் உன்னையும் சேர்த்திருப்பார்கள்
காரணம் வைத்து பிடிப்பதில்லை காதல்
காரணமே இல்லாமல் பிடிப்பது தான் காதல்
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
- லவ் கவிதைகள்
- லவ் கவிதை தமிழ்
என் சொர்கத்தை எங்கும் தேட தேவை
இல்லை உன்னை சற்று நினைத்தாலே போதும்
பயப்படும் என் விழிகள்
நம் விரல்கள் கோர்த்ததும்
பயமறியாமற் போனதே
மெய் அன்பில் பேரரசனும் சிறுபிள்ளையாவான்
காதலெனும் உயிரோவியத்தின் முன்
வெறுப்பது நீயாக இருந்தால்
உன்னை அளவிற்கு மீறி
நேசிப்பது நானாக இருப்பேன்
உன்னால் செய்தேன் என்பதை விட
உனக்காக செய்தேன் என்பது தான்
உச்சக்கட்ட மகிழ்ச்சி
காதல் ஒரு கூடை
அது அன்பு மலர்களையும்
பாசக் கனிகளையும் சுமக்கும்
பல காலங்கள் கடந்தும் கூட
இன்று வரை காலாவதி ஆகாமல்
இருந்து கொண்டு இருப்பது காதல்
என்ற ஒன்று மட்டுமே
எனக்கு, பிடித்து செய்ததை விட
உனக்கு பிடிக்கும் என்று செய்ததே அதிகம்
சொல்லத் துடிக்கும் உதடுகளுக்கும்
சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும்
இடைப்பட்ட உணர்வே காதல்
நீ நினைப்பது போல் என் கவிதை
எல்லாம் கற்பனை அல்ல நிஜம்
உன் விருப்பம் என் விருப்பம்
அறியாமல் நம் கண்கள் காதல்
கொண்டது முதல் சந்திப்பில்
தயவு செய்து மொழிகளால் பேசு
விழிகளால் பேசாதே
எத்தனை முறை வீழ்வது
உன்னுள் நான்
நீ என்னவோ
இயல்பாகத்தான் பார்க்கிறாய்
நான் தான் மயங்கி விடுகிறேன்.
பேசியே மயக்குவது உன் பழக்கம்
உன் பேச்சில் மயங்குவது என் வழக்கம்
தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி வெகுதூரம்
பயணிக்குறது உள்ளம்
உன்னருகில் உன் நினைவில
மட்டுமே என் மகிழ்ச்சியெல்லாம்
பேச நினைத்த வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது
என் பெயர் இத்தனை அழகு என்பதே