இயற்கை கவிதை - Nature Quotes

Collection of Best Tamil Nature Quotes, Nature Kavithaigal, Tamil Nature Kavithai, Tamil Iyarkai kavithai, இயற்கை கவிதை, அழகிய இயற்கை கவிதை, இயற்கை அன்னை கவிதை

இயற்கை கவிதை - Nature Quotes
Nature Quotes in Tamil
  • Tamil Iyarkai kavithai
  • Nature Kavithai
  • Nature Quotes
  • Nature in tamil
  • Iyarkai kavithai

மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் சாரலோடு
மழையில் நனையும் போது
துன்பங்கள் கூட சந்தோசமாக
மாறி விடுகிறது


மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும்
எனக்கு மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி


பொழியும் மழைத் துளிகளுக்கு
தெரிவதில்லை பல உயிர்களின்
தாகத்தை தீர்க்கத் தான் சென்று
கொண்டு இருக்கிறோம் என்று


வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது


தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை


இயற்கையின் அருமை
புரியாமல் மனிதனே
மனிதனுக்கு எமனாக
மாறுகிறான் இயற்கையை
காப்போம்


தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்


கோபங்கள் சீற்றங்கள்
மனிதனுக்கு மட்டும் அல்ல
இயற்கைக்கும் உண்டு


நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்


சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி


பூமி குளிர்ந்து பயிர்கள்
வளர்ந்து மனித இனம்
வாழ உயிர் பிச்சை
போடுகிறது வானம்
இப்படிக்கு மழை


மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும்
மலர்கள் தன்னை வளர்த்து
விட்ட வேர்களை மரம்
பூப்போட்டு வணங்குகிறதா?


தனக்கென பாராமல் பிறரை
மகிழ்விப்பது இயற்கை தான்
செயற்கைக்காக அதனை அழிப்பது
மனிதன் செய்யும் பாவம்


கடல் அலைகளுக்கு எவ்வளவு
அன்பு கரைகள் மீது
ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன


நீலவான மாளிகையில்
வெள்ளை நிற
தேவதை நிலா


இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை


மேகம் குளிக்கும் போது
இந்த பூமி சுத்தமாகின்றது
இப்படிக்கு மழை


இயற்கை செழிக்க வைத்தால்
இயற்கை நம்மை செழிக்க
வைக்கும் இயற்கையை
நாம் அழிக்க நினைத்தால்
இயற்கை அழித்து விடும்


இரு மேகங்கள் ஒன்றோடு
ஒன்று இணையும் பொழுது
மின்னல் மோதிரம்
மாற்றிக் கொள்கிறது


ஆறாத காயங்களுக்கு
நீண்ட தூர பயணமும்
இயற்கையும் தான்
சிறந்த மருந்தாக
இருக்கின்றது


இயற்கையின் மடியில்
அவ்வப்போது வந்து
இளைப்பாறுகிறது
இடியும் மின்னலும்


இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது இரவு


யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு
முழுவதும் அலைந்து
கொண்டே இருக்கின்றது


எத்தனை நாட்களுக்குப்
பிறகு மழை பூமிக்கு
வந்தாலும் ஆசையாய்
அணைத்து கொள்கிறது மண்


லட்சக்கணக்கான முத்துக்கள்
நடுவில் ஒரு வட்டமான
ஒற்றை நாணயம் நிலா


தினமும் பறவைகள் மகிழ்ந்து
விளையாடவே விளையாட்டு
பூங்காவாக அமைந்தது வானம்


பழுத்த இலை ஒன்று
நடனத்தோடு ஒய்யாரமாய்
விழுவதில் தெரிகின்றது
மரணத்தின் அழகு


உலக மலர்களின் அழகை
ரசிப்பதற்கு இங்கும் அங்கும்
பறந்து ஆனந்தமாக பவனி
வருகிறது வண்ணத்துப்பூச்சிகள்


யாரை விரட்டி
பிடிக்க ஆக்ரோஷமாக
கரைக்கு ஓடி வருகிறது
இந்த அலைகள்


தண்ணீரில் மூழ்கி
போகாமல் தலை நிமிர்ந்து
மிதக்கிறாள் தாமரை


மலைகளை அழகாக
சுற்றி வருகிறது பனி
பனியை அன்பாக மேனியில்
பற்றி கொள்கிறது மலை


வீழ்ந்தாலும் மீண்டும்
எழுந்து மரங்களாக
உயர்ந்து காட்டுகிறது
விதை


கலைந்து சென்ற மேக
கூட்டங்கள் வரைந்து
சென்ற ஓவியமே நிலா


பிரித்து பார்த்து
நேசம் காட்டாத ஒன்று
இயற்கை மட்டும் தான்


நான் விடும் மூச்சு காற்றில்
தான் நீ வாழ்கிறாய் என்னை
அழிப்பது உன்னை நீயே
வதைப்பதற்கு சமம்
இப்படிக்கு மரங்கள்


இன்று நீங்கள் எங்களை
காப்பாற்றுங்கள் நாளை
நாங்கள் உங்களை
காப்பாற்றுகிறோம்
"மரங்கள்"


முதிய மரங்களை வெட்டாதே
அது நம் பாட்டன் பூட்டன்
வளர்த்த மரம் அவர்களுக்கு
பயன் தந்து இன்று நமக்கும்
பயன் தரும் மரம்


இந்த உலகில் நிரந்தரமானவர்
என்று எவறும் கிடையாது
நிரந்தரமானது இயற்கையும்
இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே


புதிய மரத்தை நட்டு
பராமரித்து வளர்க்காமல்
பழைய மரத்தை
வெட்டுபவன்-கொலையாளி


இயற்கை நம் முன்னோர்கள்
நமக்கு விட்டு சென்ற பரிசு
இயற்கையை காப்போம்


நல்ல இயற்கையை
விட்டு செல்வோம்
அடுத்த தலை
முறைக்கு பரிசாக


மதத்தை வளர்க்காமல்
மரத்தை வளர்
மதி உள்ள மனிதா


எங்கு எதை தொலைத்ததோ
தெரியவில்லை இந்த
வானம் இப்படி கண்ணீர்
வடிக்கிறதே மழையாக


மதத்தை வளர்த்தால் மதம்
பிடிக்கும் மரத்தை வளர்த்தால்
காய், கனி, மழை, நிழல்
தரும் அடுத்த தலைமுறைக்கு
உயிர் தரும்


ஏழை பணக்காரன்
என்ற பாரபட்சம்
இல்லாமல் கொடுப்பது
இயற்கை மட்டுமே


நான் வாங்கும் சுவாசங்கள்
எல்லாம் நீ தந்து நீ இன்றி
வாழ்ந்திட எனக்கிங்கு
ஏது மூச்சு மரமே


நீ இயற்கையை அழிப்பது
சரி தான் என்றால்
உன்னை இயற்கை
அழிப்பதுவும் சரி தானே


நம் சுவாசம் நீள்வதும்
வீழ்வதும் மரங்களின்
எண்ணிக்கையை
பொருத்தது


வீட்டுக்கு வீடு மரம்
வளர்த்து வீதி அனைத்தும்
பசுமை செய்வோம்


அரை அடி நோண்டி
செடி நட்டிருந்தால்
ஆயிரம் அடி தோண்டி
போர் போடும் அவசியம்
ஏற்பட்டிருக்காது


தனக்கு தானே குழி பறித்து
கொள்கிறான் மனிதன்
இயற்கையை அழித்து


இயற்கை இறைவனின் பரிசு
உருவாக்கி விட்டு அழித்தால்
நியாயம் அழிப்பதை மட்டுமே
வேலையாகக் கொண்டால்
அது பாவம் அடுத்த தலை
முறைக்கு செய்யும் துரோகம்


இயற்கையை நாம் வைச்சு
செய்தால் இயற்கை திரும்ப
நம்மளை வைச்சு செய் செய்
என்று செய்துவிட்டு போய்விடும்


வா வாசமில்லா மலர்களுக்கும்
வாசம் கொடுப்போம்
இயற்கையைத் தாய் போல்
கண்டு மதிப்போம்