திருமணநாள் வாழ்த்து கவிதைகள் - Wedding Day Kavithai

Collection of Wedding day wishes in Tamil, Wedding wishes for WhatsApp in Tamil, Thirumananaal vaazthukkal, Kalyana Vaazthu, Happy wedding day kavithai in Tamil, anniversary kavithai

திருமணநாள் வாழ்த்து கவிதைகள் - Wedding Day Kavithai
Wedding Day Wishes Kavithai
  • Wedding Day Kavithai
  • Wedding Day wishes for Wife in Tamil
  • Wedding Day wishes for Husband in tamil
  • Tamil Wedding Day wishes
  • Tamil Wedding Anniversary
  • marriage kavithai in tamil

இணை பிரியாது இருந்து
இனி வரும் நாட்களில்
இன்பமாய் இருந்திட
என் இனிய திருமண நாள்
வாழ்த்துகள்


இன்று போல் என்றும்
மகிழ்ச்சியாக இருக்க
என் மனமார்ந்த
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


எல்லா வளங்களையும் பெற்று
நலமுடன் வாழ
இனிய திருமணநாள்
நல்வாழ்த்துக்கள்


அழகான வாழ்க்கை இது
அன்போடும் அறிவோடும்
ஆண்டாண்டு வாழ்ந்திட
இனிய திருமண நாள்
வாழ்த்துகள்


இணைபிரியா தம்பதியினராய்
நூறாண்டு காலம் வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


இந்த சிறப்பு நாள்
உங்களுக்காக மட்டுமே
ஒதுக்கப்பட்டுள்ளது
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்


வெறும் கைகளை கோர்த்து கொள்ளாமல்
இதயங்களை கோர்த்து கொள்ளுவதே திருமணம்
இனிய திருமண நல்வாழ்துகள்


வாழ் நாள் எல்லாம்
இதே நெருக்கம், அன்பு,
மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ
இனிய திருமண நல்வாழ்துகள்


ஒரு மகாராணியை மனைவியாக்குவது தான் சிரமம்
ஒரு மனைவியை மகாராணியாக்குவது சுலபம்


அன்பால் இணைந்த இந்த அழகிய உறவு
ஆலமரம் போல் வேர்விட்டு
ஆயிரம் ஆண்டுகள் வாழ
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


இன்பத்தையும் துன்பத்தையும்
இல்லறத்தில் பகிர்ந்து கொண்டு
இல்லையோர் துன்பம் என்று
இறுதிவரை வாழ்ந்து மகிழுங்கள்


உயிருள்ள வரை உடலும் நிழலுமாய்
இணைந்தே நடப்போம்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


உயிரோடு ஒன்றானவளுக்கு
இனிய திருமண நாள்நல்வாழ்த்துக்கள்


இல்லத்தில் நீ வந்த பிறகு தான்
என் உள்ளத்தில் மகிழ்ச்சி என்ற
மழையே பொழிந்தது
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்


என் வாழ்க்கையில் வசந்தம் என்பது
உன்னால் வந்தது, மகிழ்ச்சி அது நீ தந்தது
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்


உங்களுக்குள் என்றும் இந்த அன்பும்
காதலும் தொடர இனிய திருமண வாழ்த்துக்கள்


இந்த மங்களகரமான நாளில்
நீங்கள் இருவரும்
அனைத்து மங்களங்களையும் பெற்று
சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்


வாழ்த்துக்கள் மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்


வாழ்நாள் எல்லாம் இதே நெருக்கம்
அன்பு மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


இன்று திருமண நாள்
காணும் அன்பு தம்பதியருக்கு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்


நீங்கள் இருவரும் வாழ்வில்
எப்போதும் மகிழ்ச்சியோடு
வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
இனிய திருமணநாள் வாழ்த்துகள்


இமை போல் வாழ்ந்து இமயம்
போல் வளர்ந்து என்றும் இணை
பிரியாமல் வாழ வாழ்த்துகின்றேன்
என் இனிய திருமண நாள் வாழ்த்துகள்


இந்த அருமையான உறவுக்கு
நீங்கள் இருவரும் அழகான
அர்த்தத்தை தருகிறீர்கள்
உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான
திருமணநாள் வாழ்த்துகள்


கையோடு கை சேர்த்து இணைந்த
இதயங்கள் பல்லாண்டு காலம்
வாழ வாழ்த்துகிறேன்
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


உங்கள் வாழ்க்கை ஒளி போல
ஒளிரட்டும் உங்கள் திருமண
நாளில் உங்கள் வாழ்க்கை
என்றும் சிறப்பாக இருக்க
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


கண் மூடி கண்ட கனவெல்லாம்
கண் எதிரே காணும் விழாக்கோலம்
கனவும் நினைவாக வாழ்வில்
நகரும் அன்பின் தோரணம் திருமணம்
திருமண நாள் வாழ்த்துகள்


அன்பென்னும் குடை பிடித்து
மண்ணின் மனம் மாறாமல்
நீங்கள் நிலைத்து என்றென்றும்
மகிழ்ச்சியாக வாழ எனது வாழ்த்துகள்
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


குறையாத அன்பும் புரிந்து
கொள்ளும் அன்பும் விட்டுக்
கொடுக்காத பண்பும் கொண்டு
பல்லாண்டு வாழ்க என் இனிய
திருமண நாள் நல்வாழ்த்துகள்


ஒவ்வொரு வருடமும் நீங்கள்
ஒருவருக்கொருவர் வைத்திருக்கும்
அன்பு தொடந்து வளர என் இனிய
திருமண நாள் வாழ்த்துகள்


இரு உள்ளங்களும் ஒன்று
சேர்ந்து குறையாத அன்புடனும்
காதலுடனும் நீண்ட காலம் வாழ்க
இனிய திருமணநாள் வாழ்த்துகள்


பிறப்புக்கும் இறப்புக்குமிடையே
கட்டப்பட்ட காதல் பாலத்தில்
நகரும் பயணங்கள் இணைத்திடும்
உயிர்களின் இணைவு திருமணம்
திருமண நாள் வாழ்த்துகள்


நேசங்கள் நீர் போல குவிந்து
சொந்தங்கள் கடல் போல இணைந்து
என்றென்றும் உங்கள் அரவணைப்பில்
இணைந்து வாழ எனது வாழ்த்துகள்
இனிய திருமண நாள் வாழ்த்துகள்


அத்தனையும் மறந்துபோக வைத்த
அன்பானவன் தான் திருமண
பரிசளிக்கிறான் எனக்கு அவன்
எனக்கு கிடைத்து விட்டதை மறந்து


தினமும் பூத்து மகிழும் பூக்கள் போல
என்றுமே புன்சிரிப்போடும்
பாசமும் நேசமும் அளவில்லாமல்
நிரம்பி உங்கள் தாம்பத்ய வாழ்க்கை
என்றுமே புத்தம் பொலிவுற வாழ்த்துகிறேன்


எங்கோ பிறந்து வாழ்ந்த இரு
இதயங்களை இணைந்து ஒன்றாக
இருவரின் வாழ்க்கைக்குள் ஒரு
புது உதயம் தரும் சிறந்த
தினமே திருமண நாள்


நிலா இல்லாத வானமும்
நீ இல்லாத என் வாழ்க்கையும்
அழகாக இருக்காது
என்னவளுக்கு இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்


இளமையின் தேடலும்
முதுமையின் தேவையும்
என்றுமே நீ
ஒருத்தி மட்டும் தான்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


மறக்க நினைக்காத
நினைவும் வெறுக்க
நினைக்காதே உறவும்
என்றுமே நீதான்
உள்ளத்தில் நிறைந்த
இனியவனுக்க திருமணநாள் வாழ்த்துக்கள்


உன் விரல் இடுக்கில்
ஒளிந்து கொள்ளும் வரம்
ஒன்று கிடைத்தால் வாழ்க்கை
முழுக்க எனக்கு வசந்தமே
என் காதல் கணவருக்கு
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


எனக்காக எல்லாவற்றையும்
இழந்தாய் இனி நான்
எதற்காகவும் உன்னை
இழக்க மாட்டேன்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


வசதியான வாழ்க்கையை
விட உன்னோடு வாழும்
வாழ்க்கை போதுமானது
என் கண்கள் மூடும் வரை
உன் கண் முன் இறந்து
விட வேண்டும் என்று
இதயம் வேண்டுகிறது
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


அழகில் உன்னை விட
ஆயிரம் பேர் இருக்கலாம்
ஆனால் அனபால் என்னை
அரவணைக்க ஒருத்தி மட்டுமே
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்


நேற்று உன் நினைவில்
இன்று உன் அருகில்
என்றும் என உயிரில்
ஒன்றாக கலந்திருக்கும்
உயிரானாவளுக்கு இனிய
திருமணநாள் வாழ்த்துக்கள்


உன் கரம் பிடித்த
நாள் முதல் என் கண்கள்
நனைந்ததில்லை கண்ணரில்
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்


Read more