திமிர் கவிதைகள் - Attitude Quotes in Tamil
திமிர் கவிதைகளின் தொகுப்பு - Collection of Best Attitude Tamil Qutoes, Attitude Quotes in Tamil, Latest Tamil Thimir Quotes, திமிர் தமிழ் ஸ்டேட்டஸ், திமிர் கவிதைகள், தமிழ் திமிர் கவிதைகள், Tamil Thimir Instagram Story, Tamil Thimir WhatsApp Status
- Tamil Attitude Quotes
- Tamil Attitude Kavithai
- Tamil Attitude Instagram Bio
- Thimir Kavithai
- Gethu Kavithaigal
- திமிர் கவிதை
- தமிழ் கெத்து ஸ்டேட்டஸ்
- தமிழ் கெத்து கவிதை
நான் உண்மையில்
நல்லவன் நீ என்னை
ஏமாற்றாத வரை
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை
நாய் குறைக்கிறது என்று
சிங்கமும் குறைத்தால்
சிங்கத்திற்கு தான் அசிங்கம்
சுய அன்பு, சுய மதிப்பு
மற்றும் சுய மரியாதையை
பெற சுயநலமாக இரு
ஆயிரம் பேரைக் கூட
எதிர்த்து நில் ஆனால்
எப்போதும் ஒருவரை
கூட எதிர்பார்க்காதே
இவ்வுலகில் அனைவரும் உன்னை
திரும்பி பார்க்க வேண்டும்
என்றால் நீ யாரையும்
திரும்பி பார்க்காதே
கற்றுக்கொள்வதில்
முட்டாளாக இரு
கற்றுக்கொடுப்பதில்
புத்திசாலியாக இரு
மற்றவர்களை பைத்தியமாக்கும்
அளவிற்கு மகிழ்ச்சியாய் இருங்கள்
நீ சம்பாதிக்கக்கூடிய
ஒன்றை ஒருபோதும்
பிச்சை எடுக்காதே
எதிரியே ஆனாலும்
துரோகத்தால்
தோற்க்கடிக்காதே
நீ என்னை புரிந்து கொள்ளவில்லை
என்று நான் கவலைப்பட மாட்டேன்
என்னை புரிந்து கொள்ளும் அளவிற்கு
அவர்கள் இன்னும் தகுதி பெறவில்லை
என்று போய்க் கொண்டே இருப்பேன்
நீ எனக்கு மரியாதை கொடுப்பதும்
கொடுக்காமல் இருப்பதும் உன்
விருப்பம் ஆனால் நீ எனக்கு
மரியாதை கொடுக்காமல் நான்
உனக்கு கொடுக்க மாட்டேன்
என்பதை தெரிந்து கொள்
என் எதிரில் நிற்கும்
உனது செயலே நான்
யார் என்பதை தீர்மானிக்கும்
பிறரிடமிருந்து கற்றுக்கொள்
ஆனால் அவரையே பின்பற்றாதே
என்னைப் பற்றிய உன்
கருத்து நான் யார் என்பதை
ஒருபோதும் மாற்றாது
என்னை உனக்கு பிடிக்கவில்லை
எனில் நீ விலகி விடு
என்னை மாற்ற நினைக்காதே
யாரையும் அதிகம் சார்ந்து
இருக்காதே அவரது இழப்பு
உன்னை பெரிதும் பாதிக்கும்
மிகப்பெரிய வித்தியாசத்தை
ஏற்படுத்தும் மிகச் சிறிய
விஷயமே மனப்பான்மை
உனக்கான கதவு திறக்கவில்லை
எனில் உனக்கென ஒரு
வழியை உருவாக்கு
பொறுமையைக் கையாளும்
ஒருவன் எல்லாவற்றிலும்
தேர்ச்சி பெறுகிறான்
உன்னை மகிழ்வித்த
ஒன்றிற்காக நீ ஒரு
போதும் வருந்தாதே
எனக்கு துரோகம் இழைக்க
நீ எடுக்கும் ஆயுதம் நட்பு
என்றால் உன்னை வெல்ல
நான் எடுக்கும் ஆயுதம்
உண்மையான நட்பு
பையன் ஆணவமாக இருந்தால்
கம்பீரன் என்று கூப்பிடும் இந்த
உலகம் பெண்களை திமிர்
பிடித்தவள் என்று கூப்பிடுவார்கள்
அப்படி கூப்பிட்டாலும் நாங்கள்
இப்படி தான் இருப்போம்
எனக்கு பின்னாடி பேசுறவன்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவனுக்கு
முன்னாடி போறது நான்
உருவத்துக்குத் தான் முக்கியத்துவம்
என்றால் யானை தான்
காட்டுக்கு ராஜா ஆகியிருக்கும்
முடியுமானால் பிறரை விட
அறிவாளியாய் இரு ஆனால்
அதையும் அவர்களிடம் கூறாதே
நீ யாராக இருந்தாலும்
உனக்கென ஒரு தன்மானம்
திமிரு எப்பொழுதும் வைத்துக்கொள்
யாருக்காகவும் எதற்காகவும்
அதை எப்போதும் இழக்காதே
என்னை பிடிக்காதவர்களை
வெறுக்க எனக்கு நேரம் இல்லை
ஏனென்றால் என்னை பிடித்தவர்களை
நேசிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன்
நீ வெற்றி பெறுவதற்காக
பிறரை தோற்கடிக்க
ஒருபோதும் நினைக்காதே
தலை சாயும் நிலையே
வந்தாலும் தன்மானத்தை
ஒருபோதும் இழக்காதே
நான் நானாக இருப்பதாலோ
என்னவோ என்னை
பலருக்கு பிடிக்காது
மற்றவர்கள் என்னை புறக்கணிப்பதாக
நினைக்கிறார்கள் ஆனால் உண்மையில்
அவர்கள் என்னை இழக்கிறார்கள்
என்பது அவர்களுக்குப் புரிவதில்லை
நீயே உன்னை பலவவீனன்
என்று நினைப்பதே
மிகப்பெரிய பலவீனம்
தீப்பெட்டியின் கடைசி
குச்சியில் இருக்கும் கவனம்
முதல் குச்சியில் இருந்தால்
வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்
நீ வெற்றிபெற வேண்டுமெனில்
செவிடனாய் இரு
மற்றவர்கள் உன் மீது வீசும்
கற்களை உனக்கான
படிக்கற்கலாக மாற்றிக்கொள்
என் விருப்பத்தை
உன் விருப்பதிர்க்கேற்ப
தீர்மானித்துவிடாதே
தனிமையில் இருக்கிறாய்
என்பதை நினைத்து
தளர்ந்து விடாதே உனது
பலம் தனிமைதான்
கோபத்தால் சாதிப்பதை விட
பொறுமையால் ஒருவன்
அதிகம் சாதிக்கிறான்
வலி ஒரு மனிதனை
வீரனாக வடிவமைக்கிறது
அன்பின்றி உங்களால் வாழ
முடியாது என்று கூறுகிறார்கள்
அன்பை விட ஆக்ஸிஜன்
மிகவும் முக்கியமானது
என்று நான் நினைக்கிறேன்
உன் பலத்தை அறிய ஆயிரம்
பேருடன் சண்டையிடு உன்
பலவீனத்தை அறிய அரை
மணி நேரம் தனித்திரு
விசுவாசம் ஒரு விலை
உயர்ந்த பரிசு அதை
மலிவான மக்களிடம்
எதிர்பார்க்காதே
வலிகள் எப்போதும்
கண்ணீராய் வெளிப்படுவதில்லை
அது சில நேரங்களில்
புன்னகையாகவும் வெளிப்படும்
உன் பெயரை நினைவில்
கொள்ள இந்த உலகிற்கு
ஒரு காரணத்தை கொடுப்பதே
உன் உண்மையான வெற்றி
நல்லவனாய் இரு ஆனால்
அதை நிரூபிக்க முயற்சிக்காதே
அதைவிட பெரிய முட்டாள்தனம்
வேறு எதுவும் இல்லை
நீ வெற்றிபெற நல்ல
நண்பர்களை விட
சிறந்த எதிரிகளே தேவை
உந்தன் கேள்வியில் அதிகாரம்
இருக்குமானால் நிச்சயமாக
என்னுடைய பதிலில்
திமிரின் சாடை இருக்கும்
சிங்கத்துக்கு எப்போதுமே
எந்த இடத்திலும் தனி இடம்
உண்டு அதுபோல் தான் நானும்
தனித்து விடப்படும் போது
தான் நம் பலமும் பலவீனமும்
நமக்குத் தெரிய வரும்
ஒரு சிங்கம் ஆடுகளின்
கருத்துகளைப் பற்றி
பொருட்படுத்துவதே இல்லை
பறப்பதற்கு தைரியம்
இல்லாத போது சிறகுகள்
இருந்தும் பயனில்லை
அடுத்தவர் விருப்பத்திற்கு
ஏற்ப வாழ வேண்டும்
எனில் செத்து விடு
அழகு உங்கள் கவனத்தை
ஈர்க்கிறது ஆனால் ஆளுமை
உங்கள் இதயத்தை ஈர்க்கிறது
கோபத்தில் முடிவெடுக்கதே
மகிழ்ச்சியில் வாக்கு கொடுக்கதே
இரண்டுமே ஆபத்தில் முடியும்
அடுத்தவனை போல் இருக்க
ஆசைப் படாதே உனக்கென்று
தனித்துவம் உண்டு நாயைப்
பார்த்து சிங்கமும் குறைத்தால்
அவமானம் தான் மிஞ்சும்
போலியான உபசரிப்புகளை விட
உண்மையான திமிர் அழகானது
பெருந்தன்மையாக நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது
தரம் தாழ்ந்த சிந்தனைகளுக்கு
பதில் சொல்ல அவசியமில்லை
நாய் குறைக்கிறது என்று
சிங்கமும் குறைத்தால்
அது அசிங்கமாகிவிடும்
உண்மையாக இருப்பவர்கள்
கொஞ்சம் திமிரோடு
தான் இருப்பார்கள்
என் பின்னாடி பேசுறவங்கள
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஏன்னா அவங்க என் முன்னாடி
பேச பயப்படுவாங்க அந்த
பயம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
தனி ஒருவனாய் போராடி
கரை சேர்ந்த பின் திமிராய்
இருப்பதில் தப்பில்லை
நான் சலித்து பின்
செல்பவன் அல்ல
எதுவாக இருந்தாலும்
சாதித்து முன் செல்பவன்
பத்தோடு பதினொன்னா
இருக்க புடிக்காது
கெத்தோடு தனியா
இருக்கதான் புடிக்கும்
விதியது விதியென
பணியாது துணிவாய் நில்
என்னை தொலைத்தவர்களை
நான் ஒருபோதும் தேடியதில்லை
யாருக்கு அஞ்சியும்
யாரிடம் கெஞ்சியும்
வாழ வேண்டாம்
எல்லாரையும்
மிஞ்சியே வாழ்வோம்
பொறுமையா தானே இருக்கானு
ரொம்ப ஆட கூடாது
என்னுடைய பொறுமைக்கு
ஒரு எல்லை உண்டு
மத்தவங்க கால்ல
விழுந்து வாழ்றதோ
இல்ல கால வாரி
விட்டு வாழ்றதோ
எப்பயுமே என்னோட
அகாராதிலேயே கிடையாது
மனதில் பட்டதை பேசுவது
திமிரு என்றால் அது
என்னிடம் கொஞ்சம்
அதிகமாகவே இருக்கு
உன்ன மதிக்கிறவங்க
கிட்ட அன்பா இரு
மதிக்காதவங்க கிட்ட
எப்போதும் திமிராவே இரு
தேவைக்காக பேசுவோரையும்
பிடிக்காது தேவைக்காக
பேசவும் தெரியாது
என் குணம் என்
எதிரில் நிற்பவனின்
குணத்தை பொறுத்தது
என் வாழ்நாளில் என்னை
அறிந்துகொண்டவர்களை
விட தூக்கி எறிந்தவர்கள்
தான் அதிகம் அதற்காக
நான் கலங்கயதும் இல்லை
கலங்க போவதும் இல்லை