பொங்கல் வாழ்த்துக்கள் - Happy Pongal Wishes in Tamil

Pongal wishes 2024, Pongal wishes in tamil 2024, Tamil Pongal SMS, Pongal SMS, Wishes for Pongal in Tamil, Pongal Kavithai, Pongal Kavidhai, Pongal Vaalthu Kavithai, Pongal Wishes Kavithai, Pongal wishes quotes, பொங்கல் வாழ்த்து கவிதை, பொங்கல் கவிதை, பொங்கல் வாழ்த்து SMS, பொங்கல் 2024

பொங்கல் வாழ்த்துக்கள் - Happy Pongal Wishes in Tamil
Happy Pongal Wishes in Tamil
  • Happy Pongal 2024
  • Pongal Tamil Messages
  • Pongal Whatsapp messages
  • Pongal wishes in tamil fonts
  • பொங்கல் திருநாள் வாழ்த்துகள்
  • தைத் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகள்

அன்பும் ஆசையும் பொங்க
இன்பமும் இனிமையும் பொங்க
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்


அறுவடைத் திருநாள்
பொங்கல் நன்னாளில்
தமிழர்கள் வாழ்வில்
அன்பும் அமைதியும்
நலமும் வளமும் பெருகட்டும்


தித்திக்கும் கரும்பை போல
உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில்
இனிக்கட்டும் இனிய
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


Tamil Pongal Images

இந்த தைத்திருநாளில் நாம் உண்ண
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும்
உழவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சூரிய பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கலை போல உங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியும்
செல்வமும் பொங்க வாழ்த்துக்கள்


தைத்திருநாளில் வளமுடன் வாழ
அன்பு பொங்க இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தரணியெங்கும் கொண்டாடும்
தைப்பொங்கல் திருநாளில்
பொங்கலோடு இணைந்து
அனைவர் மனங்களும்
இன்பத்தில் பொங்க
பொங்கல் வாழ்த்துக்கள்


அன்பு பொங்க, ஆசைகள் பொங்க
இன்பம் பொங்க, இனிமை பொங்க
என்றும் மகிழ்ச்சி பொங்க
பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்


இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


Tamil Pongal WhatsApp Image

அன்பும் ஆனந்தமும் பொங்கிட
அறமும் வளமும் தழைத்திட
இல்லமும் உள்ளமும் பொங்க
இனிய தமிழர் திருநாளாம்
பொங்கல் நல்வாழ்த்துகள்


இன்பம் பொங்கி வழியட்டும்
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
இனிய தைதிருநாள் நல்வாழ்த்துகள்


இல்லத்தில் இன்பம் சூழ
உள்ளத்தில் உற்சாகம் பொங்க
வாழ்க்கையில் வளங்கள் வளர
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


இனியவை உங்கள் கரங்களில்
சேரட்டும் இனிதொரு நாளிலிருந்து
இனிய தைபொங்கல் நல்வாழ்த்துகள்


எனது அன்பிற்குரிய தமிழகமக்கள்
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்


கரும்பாய் மகிழ்ச்சி இல்லத்தில்
நிலைக்க என் இதயம் கனிந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


Pongal Wishes in Tamil

இன்பம் பொங்கி
துன்பம் அணையட்டும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்


அன்பும், வளமும், செல்வமும்
புதுவெள்ளமாய் பொங்கி பெருகட்டும்
பொங்கல் நல்வாழ்த்துகள்


மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
புதுச்சோறு பொங்கி வரும்
பொங்கல் வாழ்த்துகள்


வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்
வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்
அறியாமை அகன்று அறிவு
பொங்கட்டும் அனைத்தும் பொங்க
இனிய பொங்கல் வாழ்த்துகள்


வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி
வெயில் மழை பாராமல் பாடுபட்டு
விளைத்தெடுத்த நெல்மணிகளை
புதுப்பானையில் போட்டு பொங்கலிட்டு
பொங்கலோ பொங்கலென்று
அனைவரும் சேர்ந்து கூறிடுவோம்


சூரியன் தன் ஒளிக் கற்றை
இந்த பூமியின் மீது
செலுத்துவதைப் போன்று
வாழ்வில் மகிழ்ச்சி பரவட்டும்
பொங்கல் வாழ்த்துகள்


நல்வாழ்வு பொங்க
இல்லத்தில் சுவையாறு தங்க
இந்த நாள் போல்
எந்நாளும் மகிழ்வுடன் வாழ
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்


Pongal Kavithai

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணி எங்கும் வளம் செழிக்கும்
இதயங்கள் புன்னகை பூக்கும்
உதயமாகும் கதிர் போல
இனிக்கட்டும் உங்கள் வாழ்கை
செங்கரும்பைப் போல
தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்


புதிய பொங்கல் தை பொங்கல
உலக பொங்கல் உழவன் பொங்கல்
விடியல் பொங்கல் காணும் பொங்கல்
போகட்டும் போகியின் மாலை
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்


நம்மை வாழ வைக்கும் தமிழுக்கு
விவசாயிகளுக்கும் இந்நாளில் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்வோம்
பொங்கல் நல்வாழ்த்துகள்


பொங்கல் அன்று நலமும்
வளமும் என்றும் சூழ்ந்திட
அன்னைத் தமிழ் மணம்
பரப்பி வாழ்த்துகிறோம்


Pongal Kavithai

  • Pongal Wish Kavithai
  • Pongal Kavithai 2024
  • Pongal Vaalthu Kavithai
  • Pongal Vazhthu 2024
  • Pongal Valthu Images
  • Pongal Valthu WhatsApp Images

இனிமை பொங்க என்றும்
உங்கள் வீட்டில் மகிழ்ச்சி
பொங்க பொங்கலோ
பொங்கல் வாழ்த்துகள்


தமிழர் மரபு காக்கவும்
பாரம்பரியம் போற்றவும்
பொங்கல் வாழ்த்துகள்


வெல்லம், பால் மற்றும் உலர்
பழங்களின் இனிப்பு உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


Pongal Images in Tamil


விவசாயம் செழிக்கட்டும்
விவசாயிகளின் வாழ்க்கைத்
தரம் உயரட்டும். இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


துன்பங்கள் அனைத்தும்
எரிந்து அனைவரின்
வாழ்க்கையும் கரும்பை
போல இனிக்கட்டும்


பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம். இனிய
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


வாழ்க்கை வளம் பெற வாழ்த்திப்
பாடும் சொற்களெல்லாம்
வந்து சேரட்டும் உங்கள்
வாசல் கதவு தட்டிடவே
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொங்கலுக்கு வெள்ளை அடித்து
புத்தாடை உடுத்தி பசும் கன்று
காளைகளுக்கு நன்றி சொல்ல
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


நம் விவசாயிகளும் விளை
செல்வங்களும் செழிப்புடன்
என்றும் நிறைந்திருக்க
நம் வாழ்வு செழிக்க
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


என் வயிற்றுக்காக
ஏர்பிடித்து தலைகோதி
வியர்வையை வித்தாக்கி
உழைப்பை உரமாக்கிய
உழவனுக்கு உளமார
பொங்கல் நல்வாழ்த்துகள்


நல்வாழ்வு பொங்க
செல்வமும் வளமும் தங்க
இயற்கை வேளாண்மை செழுக்க
வீடுதோறும் புதுப்பானை பச்சரிசி
வெல்லம் இட்டு பொங்கலோ
பொங்கல் என்று சொல்லுவோம்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


நல்லது நடந்தேற சூரியன்
அவன் ஒளி கற்றை
உம் வாழ்வில் வீச வேண்டும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


  • Pongal kavithai
  • Happy Pongal Wishes Tamil
  • Tamil Happy Pongal Wishes
  • Tamil Pongal SMS
  • Pongal Tamil SMS
  • Thai Pongal Images
  • Thai Pongal Kavithai
  • Tamil Thai Pongal wishes

நல்லவன் - கெட்டவன்
முடிந்தவன் - முடியாதவன்
இருப்பவன் - இல்லாதவன்
என வேறுபாடும் பார்க்காமல்
எல்லோரும் ஒன்றாய் கூடிக்
கொண்டாட இனிதே வந்தது
பொங்கலோ பொங்கல்


இனிய பொங்கல் நாளில்
மகிழ்ச்சியும் மன அமைதியும்
பெருகட்டும் ஆரோக்கியமும்
செல்வமும் பொங்கட்டும்
எங்கும் சாந்தி நிலவட்டும்
பொங்கல் வாழ்த்துக்கள்


வீடுகள் மாட்டுத் தொழுவங்களுக்கு
வண்ணம் தீட்டி பச்சரிசி
புது வெல்லம் செங்கரும்பு
மஞ்சள் மாக்கோலம்
புத்தாடையுடன் பாரம்பரியம்
பண்பாட்டை பறைசாற்றும் ஒருநாள்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்


பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன்
உலகின் பசி போக்கும் உழவர்கள்
படைப்புக் கருவிகளாக விளங்கும்
கால் நடைகளுக்கு நன்றி
தெரிவிக்கும் தைத்திருநாள்
பொங்கல் வாழ்த்துக்கள்


பிழைப்புக்காக திசைகள் எட்டும்
சென்ற பந்தங்கள் ஓர்நாளில்
ஒன்றுகூடி மகிழும் திருநாள்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


இந்த நன்னாளில் பொங்கும்
பொங்கல் உங்கள் வாழ்வில்
பல வெற்றிகளை பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ எனது
மனமார்ந்த வாழ்த்துக்கள்


தை திங்கள் திருநாள்
தொன்மை வாய்ந்த
தமிழர் திருநாள்
கால்நடைகள் தொட்டு
வேர்வை சொட்ட
உழைக்கும் உழவர் திருநாள்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


மழையின்றி வெயிலின்றி
அயராமல் உழைத்து
உலகுக்கே உணவளிக்கும்
உழவாளியை போற்றுவோம்
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


வாழும் வள்ளல்களாகிய
நம் விவசாயிகளை வாழ்த்தி
போற்றி பாதுகாத்திட
உறுதி எடுத்திடுவோம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


புதிதோ? அன்று போர்க்களம்! - வரும்
புல்லர் போவார் சாக்களம்
பதறிப் போகும் சிங்களம்! - கவி
பாடி முடிப்பான் மங்களம்!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தொற்றுநோய்கள் ஒழிய
போர்களெல்லாம் முடிய
உலகெங்கும்
நலமும் வளமும்
மட்டுமே நிறைய
வழியட்டும் பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொங்கல் திருநாள் பொலிவாய்ப் புலர்ந்திட
பொங்கட்டும் இன்பம் புவியோர் திளைத்திட
இங்கவர் வாழ்வு இனிதாய் வளம்பெற
தங்கத் தமிழ்கொண்டு வாழ்த்துகிறோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பங்கயம் பூத்துக் கங்கை
பசுமையும் கொள்ளல் போல
மங்கலம் பெருகி மக்கள்
மகிழ்வினால் நிறைந்து துள்ள
எங்கிலும் அமைதி வேண்டி
இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
பொலிவுற வாழ்த்துகின்றேன்


வான்பொழிந்து சூரியஒளி அளித்து
மண் சுமக்க கரும்பு இனிக்க
இயற்கை தந்த பரிசு புன்னகை
மட்டுமே பெரிது இல்லம் தோரும்
பொங்கட்டும் பொங்கலில் இருந்து
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


பொங்கலோடு வளமும்
நலமும் செல்வமும்
மகிழ்ச்சியும் பொங்கிட
நல்வாழ்த்துக்கள்


மார்கழி தை இணைக்கும் இந்நாள்
நல் உறவுகளை ஒன்றிணைக்கும்
நன்நாளாக கொண்டாட
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


நன்மை பொங்கட்டும்
தீமை எரியட்டும்
புதுமை பொங்கட்டும்
மடமை எறியட்டும்
நன்மைகள் பெறுக
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


இமை திறப்பது இருள் அகல
இசை பிறப்பது மருள் விலக
மேகம் திறப்பது மழை பெருக
மேன்மை பிறப்பது உயர்வு அடைய
இந்த தாய் பிறந்ததோ நல்வழி பிறக்க
இனிய தைதிருநாள் நல்வாழ்த்துக்கள்


  • Tamil pongal Wishes 2024
  • Tamil pongal Wishes SMS
  • Thala pongal wishes in tamil
  • pongal kavithai
  • pongal kavithai for whatsapp
  • pongal wish kavithai

உடல் களைப்பு
உடலுக்கு மட்டும்
மனதிற்கு என்றும்
தேவை இனிப்பு
அதை இணைப்பது
தான் பொங்கலின் சிறப்பு
இனிய பொங்கல் நல்வாய்த்துகள்


விடிகின்ற பொழுது எங்கும்
கரும்பாய் இனிக்கட்டும்
இந்த தைத்திருநாள் முதல்
இனிய பொங்கல் மற்றும்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


பொங்கல் என்பது சங்கத்
தமிழனின் தேசியத் திருவிழா
வீசிய விதையின் வேரில்
முளைத்த வியர்வைப் பூக்களின்
இயற்கைத் திருவிழா
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழுது வாழ்வாரை...
தொழுது வாழ்வோம்...


தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
கனவுகள் நிஜமாகும்
அவலங்கள் அகலும்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


தைத் திருநாளில்
தரணியெங்கும்
சிறந்திட தமிழ்
நிலம் மேம்பட
உழைத்திடுவோம்
உயர்ந்திடுவோம்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்


வேகமும் விவேகமும்
தூய்மையும் உழைப்பும்
சொத்தாய் கொண்ட
நம்வாழ்வில் பொங்கட்டும்
புதுப்பொங்கல்
பொங்கல் வாழ்த்துகள்


உடல் மண்ணுக்கு
உயிர் தமிழுக்கு
இதை உரக்கசொல்வோம்
உலகிற்கு இனம் ஒன்றாக
மொழி வென்றாக புது
வேலை எடுப்போம் விடிவிற்கு
இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்


உறவுகளின் புன்னகை
வீட்டில் பொங்க
இனம் புரியா இன்பம்
மனதில் பொங்க நண்பர்கள்
சூழ மகிழ்ச்சி பொங்க
பொங்கட்டும் தை பொங்கல்


உழவனை போற்றிட
பிறக்குது ஒரு திருநாள்
ஆதவனை போற்றிட
உதிக்கிறது ஒரு திருநாள்
மாட்டினை போற்றிட
துள்ளி வருகுது ஒரு திருநாள்
உலக மக்கள் கூடி
ஒன்றிணைய வருகிறது
பொங்கல் திருநாள்


பச்சரிசி அச்சு வெல்லம்
கலவை செய்து பொங்கலிட்டு
பகலவனை வணங்கிவிட்டு
பகைவரையும் வாழ்த்துவோமே
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


சந்தோஷமும் செல்வமும்
நம் வாழ்வில் பொங்கி வர
சாதி மத பேதமின்றி
சங்கடங்கள் ஏதுமின்றி
கை கூப்பி வரவேற்போம்
தை பொங்கல் திருநாளை
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


வருகிறது புது பொங்கல்
வளம் தரும் தை பொங்கல்
காளைகள் சீறிப்பாய
காத்துக்கிடக்கு வாடி வாசல்
அரிசி மாவில் கோலமிட்டு
ஜொலிக்கிறது வீடு வாசல்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


உழவனுக்கு ஒரு திருநாளாம்
உலகம் போற்றும் நன்னாளாம்
சூரியனை வணங்கிவிட்டு
சுருக்கு பையில் காசு எடுத்து
தித்திக்கும் கரும்பு வாங்கி
தெவிட்ட தின்னும் திருநாளாம்
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


உழைக்கும் உழவர்களின்
இல்லமும் உள்ளமும்
பொங்கிட இனிய
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உழவர்களின் திருநாளாம்
ஊரெங்கும் பெருநாளாம்.
அனைவருக்கும் இனிய
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


கை கட்டி வேலை செய்யும்
படிப்பாளியை விட கை
கட்டாமல் வேலை செய்யும்
படைப்பாளி சிறந்தவன்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


நாம் பணம் சம்பாதிக்க
ஆயிரம் வழிகள் இருக்கலாம்
ஆனால் நமக்கு வேண்டிய
உணவை சம்பாதிக்க ஒரு
விவசாயியால் மட்டுமே முடியும்
விவசாயம் காப்போம்!
விவசாயியை காப்போம்!
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


மாதவனை வணங்கிய மார்கழி முடிந்தது
ஆதவனை வணங்கிட தைப்பொங்கல் வருகுது
போகட்டும் துன்பமென போகியோடு துவங்குது
பொங்கட்டும் இன்பமென பொங்கல் தொடருது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


தமிழர் திருநாளாம்
தை பொங்கல் திருநாளாம்
பொங்கி வரும் பொங்கல்
போல பொங்கட்டும் மகிழ்ச்சி
இனிய தமிழர்திருநாள் நல்வாழ்த்துக்கள்


  • Tamil pongal image for status
  • Tamil pongal SMS
  • Tamil pongal SMS 2024

இந்த தை திருநாளில்
இல்லா வளங்களும்
எல்லா வளங்களும்
பெற்று இனிதே வாழ
இனிய தை திருநாள்
நல் வாழ்த்துக்கள்


பானை பொங்கி
மகிழ்ச்சி பொங்க
பொங்கல் வருது…!
பொங்கலோ…! பொங்கல்…!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கி வழியும் பொங்கலைப்
போல உங்கள் வாழ்வில்
வெற்றியும் மகிழ்ச்சியும்
பொங்கி பொங்கி வழிந்திட
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


அனைவர் இல்லத்திலும்
ஒற்றுமையும் மகிழ்ச்சியும்
பொங்க இறைவனை
வணங்குவோம் இனிய
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


தமிழன் என்பதில்
பெருமை கொள்ளும்
என் தொப்புள்கொடி
உறவுகளுக்கு என்
இனிய இனிய இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொங்கல் போல் புன்னகை
பொங்கட்டும் மக்கள் மனசெல்லாம்
மகிழ்ச்சி மலரட்டும் உள்ளம்
எல்லாம் உற்சாகம் பரவட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


புதிய நெல்லை அறுத்து
வந்து பொதிந்திருக்கும்
உமியகற்றி புத்தரிசி
முத்தெடுத்து பொங்கலிடும்
வேளையிலே பொங்கலோ
பொங்கலென பாவையரும்
குலவையிட பொங்கி வரும்
பொங்கலை போல்
பொங்கட்டும் மகிழ்ச்சியெங்கும்


நோயற்ற சுகத்தை பெற்று
மாசற்ற செல்வதை பெற்று
அன்புடைய சுற்றத்தை பெற்று
இதயத்தில் இன்பத்தை பெற்று
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


தித்திக்கும் தமிழ் போல
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானை பொங்கல் போல
பிறக்கட்டும் புதுவாழ்வு
திகட்டாத கரும்பு போல
இனிக்கட்டும் மனிதனின் மனது
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உலகத் தமிழினம்
உற்சாகத் துள்ளலுடன்
உறவுடன் ஒன்றுபட்டு
தமிழர்களின் தைத்திருநாளை
கொண்டாட வாழ்த்துக்கள்


புன்னகை பூக்கட்டும்
ஆனந்தம் பொங்கட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மங்களம் பொங்கட்டும்
மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்
எண்ணியது ஈடேற
தமிழர் திருநாள்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


வெண் பொங்கலின் சுவையும்
சர்க்கரை பொங்கலின் இனிமையும்
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை
தரட்டும் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


செவ்விதழ் திறந்து
செந்தமிழ் பேசும்
செந்தமிழ் உறவுகளுக்கு
தை பொங்கல் வாழ்த்துக்கள்


மழைக்கும் மண்ணுக்கும்
உழுது, விதைத்து, உணவை
கொடுக்கும் உழவனுக்கும்
சிறு உயிர் உட்பட உழவனுக்கு
உதவிய அனைவருக்கும் இந்த
நல்ல நாளில் நன்றிகள்
தை பொங்கல் வாழ்த்துக்கள்


இல்லங்களில் பொங்கல் பொங்கிட
உள்ளங்களில் ஆனந்தம் பொங்கிட
உங்களுக்கு என் உள்ளம் பொங்கும்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்


காலம் பல மாறினாலும்
ஆட்சிகள் பல வந்தாலும்
காட்சிகள் பல தந்தாலும்
சாட்சி சொல்லி நிற்கும்
ஓர் நாள் அது என்றும் மாறாத
எம் தமிழர் திருநாளாம்
பொங்கல் திருநாள்


மண் காத்து மலை காத்து
உழவையும் உழவனையும் காத்து
பொங்கலிட்டு புன்னகை
பொங்க கொண்டாடிடுவோம்
தை பொங்கல் வாழ்த்துக்கள்


உள்ளம் மகிழ
இல்லம் நிறைய
பொங்கலோ பொங்கல்!


உழுது விதைத்தால்
அறுவடை நிச்சயம்
எழுந்து முயற்சித்தால்
வெற்றி நிச்சயம்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்


உலகில் உயர்ந்த சாதி என்று
மார்தட்டி சொல்லும் தகுதி
படைத்த ஒரே சாதி உழுது
விதைத்து பசியாற்றும்
விவசாய சாதி தான்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


நோய்க்கு மருந்தளித்து உயிர்
காக்கும் மருத்துவர் கடவுள்
என்றால் அந்த மருத்துவருக்கே
உணவளித்து உயிர் காக்கும்
உழவன் மிகமிக உயர்ந்த கடவுள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உலக உயிர்களுக்கு உணவூட்டி
உயிரூட்டும் உழைப்பும் உழவும்
உழவனும் உயர்ந்தவர்கள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உழவும் உழவனும் இல்லை
என்றால் உடலுக்கு உணர்வில்லை
உயிருக்கு உடலில்லை இதை
உணராதோர் மனிதனே இல்லை
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


மங்கலம் எங்கும் தங்கிட
நலமும் வளமும் என்றும் சூழ்ந்திட
அன்னைத் தமிழ் மணம் பரப்பி
வாழ்ந்திட வாழ்த்துகிறோம்


தைமகள் வந்தாள் இளமையோடு
தாய்மண் காக்க வந்திட்டாள் துள்ளலோடு
மனமது நிறையும் பொன்னாள்
புன்னகை விரியும் நன்னாள்
பொங்கல் நல் வாழ்த்துக்கள்


தரணியெங்கும் வளம் தழைக்கட்டும்
கழனியெங்கும் நெல்மணிகள் நிறையட்டும்
உள்ளமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்


தைத்திருநாள் பிறந்தது
புது வாழ்வு மலர்ந்தது
தரணியெங்கும் உழவு சிறந்தது
தமிழரின் மனங்குளிர்ந்தது
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


பொங்கல் திருநாள்
அனைவருக்கும் வளத்தை
தரட்டும் வியர்வை சிந்தி
உழைக்கும் நமது விவசாய
பெருங்குடி மக்களின் முகத்தில்
மகிழ்ச்சியை தரட்டும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்


புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் பாசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி வரவேற்போம்
தைத்திருநாளை