அண்ணன் தங்கை கவிதை - Brother Sister Kavithai

Collection of Brother Sister Kavithai in Tamil, Annan kavithai for sister tamil, Thangachi annan kavithai in tamil, Annan Thangachi whatsapp kavithai

அண்ணன் தங்கை கவிதை  - Brother Sister Kavithai
Annan Thangai Kavithai
  • Collection of Brother Sister Kavithai
  • Annan Thangachi Kavithai
  • Annan Thangachi kavithai in tamil
  • Brother Sister paasam kavithai
  • Annan Kavithai to Sister tamil

ஆயிரம் சண்டை வந்தாலும்
விட்டு கொடுக்காத ஒரே
உறவு அண்ணன் தங்கை
உறவு மட்டுமே


மனம் விட்டு பேச
ஒரு நல்ல அண்ணன்
கிடைத்தால் அதுவும்
தாயின் மடிதான்


Annan Thangai Kavithai

கூட இருக்கும் போது
இம்சையாகவும் இல்லாத
போது பேரிம்சையாகவும்
இருப்பது அன்புள்ள
தங்கைகள் மட்டுமே


எத்தனை முறை அம்மா
திட்டினாலும் எப்போதும்
ஓய்வதே இல்லை
அண்ணன்தங்கை சண்டை


தங்கைக்கு அண்ணன்
இன்னொரு தகப்பன்


சுயநலமில்லாத அக்கறையும்
பாசமும் அண்ணனிடம்
மட்டுமே கிடைக்கும்


அம்மாவின் அன்பும்
அப்பாவின் பாதுகாப்பும்
ஒன்றாக அண்ணனிடம்
மட்டுமே கிடைக்கும்


பிறக்கும் முன் உன்ன
அறிந்திருந்தால் பிறக்கும்
போது கூட அண்ணா
என்று அழுதிருப்பேன்


அண்ணன் தங்கை உறவு
என்பது கையில் கட்டும்
கயிற்றில் வாழ்வதில்லை
இதயத்தால் கட்டப்படுவது


அண்ணன்தங்கை உறவ
என்பது வெளிக்காட்ட
முடியாத விலை
மதிப்பில்லா பாசம்


உடன்பிறக்கும் உறவுகள்
என்றும் உடனிருக்கும்
பொழுதுகள் பேரழகு


ஒவ்வொரு தங்கையின்
மிகப்பெரிய கர்வம்
தனக்கொரு அண்ணன்
இருக்கிறான் என்பதே


அழுதால் துடைக்கும்
சிரித்தாள் தட்டும்
செல்லமாய்க் குட்டும்
பாசக்கை தங்கை


டேய் அண்ணா எனும்
போதே அதட்டலையும்
அன்பையும் ஒரு சேர
காட்டுவது தங்கை மட்டுமே


வயதால் வளர்ந்தாலும்
தங்கச்சி எப்போதும்
என் தேவதை தான்


அண்ணா என்று நீ அழைக்கும்
ஒரு வார்த்தைக்காக எதை
வேணாலும் செய்வேன் உனக்கு


இந்த ஜென்மம் மட்டும்
இல்லை இன்னும் ஏழேழு
ஜென்மம் எடுத்தாலும்
நீ தான் என் தங்கை


காலங்கள் கடந்தாலும்
என் தங்கைக்கு என்
இதயத்தில் எப்போதும்
தனி இடம் உண்டு


கண்கள் அழவில்ல
இதயம் அழுகிறது தங்கை
திருமணமாகி செல்கையில்


விளையாட்டுக்கு கூட
தங்கையை அடுத்தவரிடம்
விட்டுகொடுப்பதில்லை மனது


என்னைவிட வயதால்
சிறியவள் என்றாலும்
மனதால் பெரியவள்
என் தங்கை


கடவுள் எனக்கு
கொடுத்த பரிசு
என் செல்ல தங்கச்சி


இன்னும் ஒரு ஜென்மம்
வேண்டும் அதிலும் நீயே
என் அண்ணனாக வேண்டும்


இந்த உலகில் தந்தைக்கு
பின் நான் நம்பும் ஒரே
ஆண் அண்ணன் மட்டுமே


சண்டையிட்டு விட்ட
அடுத்த நொடிய
சமாதானம் ஆகும்
உறவு அண்ணன் தங்கை


வெளியில் எதிரியை போல
நடந்து கொண்டு மனதில்
அதிக பாசம் வைத்திருக்கும்
உறவு அண்ணன் தங்கை


அண்ணன் தங்க சண்டை
இட்டு சமாதானம் ஆவது
வரை வீடே ஒரு
போர்க்களம் தான்


அம்மாவிற்கு பிறகு
என்னை புரிந்து கொள்ளும்
ஒரு பெண் என் தங்கை


அண்ணன் என்ற வார்த்தை
அழகானது என் தங்க
நீ அழைக்கும் போது தான்


அண்ணா என்று
அழைக்கும் போது
உன் அடிமையும் ஆவேன்


என்னை உள்ளத்தில் தாங்கும்
உன்னை போல் ஒருவன்
இன்னும் இந்த உலகில்
பிறக்கவில்லை அண்ணா


அண்ணன் என்ற
உறவில்லாத ஒரு
பெண் உலகில் இல்லை


அண்ணன்களின் அரும
தெரிய பெண்களுக்க
அவர்களின் மாமியார்
வீடு தேவைப்படுகிறது


ஆண் அழகாகிறான்
தனது தங்கைக்க
தான் தந்தை என்று
உணரும் போது


தங்கையோடு பிறந்த
அண்ணனுக்கு மட்டும
கிடைக்கும் தேவதையோட
வாழும் வரம்


அண்ணனுக்கு கண்ணீர்
விடுபவள் தங்கை
தங்கைகாக உயிர
விடுபவன் அண்ணன்


பிரிக்க முடியாத சொந்தம்
மறக்க முடியாத பந்தம்
தவிர்க்க முடியாத உயிர்
எல்லாமே தங்கை மட்டுமே


இறைவன் கொடுத்த
முதல் சொத்து என்
அன்பு தங்கை


ஆண்டுகள் ஆயிரம் ஆகலாம்
ஆனால் அண்ணன் தங்கை
பாசம் ஆயுள் வரை மாறாது


ஒரு தங்கச்சி அவள் அண்ணா
மேலக்காட்டுற அதிகபட்ச
பாசமே சண்டையா
தான் இருக்கும்


ஆயிரம்தான் அவனிடம்
சண்டையிட்டாலும்
பேசாமல் இருப்பதில்ல
இருக்கவும் முடியாத
என் அண்ணனுடன்


தங்கை மனதில்
அண்ணன் இன்னொர
தந்தை தான்


நண்பனை போல
நினைவுகளை கொட்டும்
உயிரோட்டமான அகராதியின்
மறுவடிவம் அண்ணன்


ஒரு அண்ணனொட வீரம்
ஆயிரம் யானைக்கு சமம்
ஆனால் ஒரு தங்கச்சியோட
வீரம் நூறு பேய்க்கு சமம்


பெற்ற மகளிடம்
கூட உன் சாயலை
தேடுகிறது உள்ளம்
இப்படிக்கு அண்ணன்


என் முதல்
பெண் தோழி
என் தங்கையே


எந்த பிரட்சனை வந்தாலும்
அண்ணா என்று உரிமையோடு
என்னை அழைக்கும் பொழுது
அண்ணா என்ற வார்த்தை
அமிர்தமாகிறது என் காதுகளுக்கு


எனக்கு எதுன்னாலும்
என் அண்ணன்
வருவான் என்று நம்பும்
தங்கையின் நம்பிக்கையே
அண்ணனின் பலம்

Read more