காதல் வர்ணிப்பு கவிதை - Love Impress Quotes in Tamil

Tamil Propose Kavithai, Tamil Impress Quotes, Impress Kavithai in Tamil, Tamil WhatsApp Love Propose Kavithai, Tamil First Love Kavithai

காதல் வர்ணிப்பு கவிதை - Love Impress Quotes in Tamil
Tamil Proposal Kavithai

அடி என்னவளே!
வழி தெரியாமல்
தவிக்கிறேன் உன்
உயர கூந்தலில்
சிக்கிக்கொண்டு


இசைத்தட்டு சுழல்வது
போல சூழலும் இவள்
விழி சூழலில் மையம்
கொண்ட காதல் புயல் நீ!


உன்னை காணாமல் நான்
வருந்தி கவிதைகள் எழுதினேன்
ஆனால் கவிதைகளில் உள்ள
வார்த்தைகளோ உன் அழகு
காணாமல் வருந்துகிறது


நீர் இன்றி மீன் வாழ முடியாது
நீ இன்றி நான் வாழ முடியாது
வருவாயா இல்லை
என்னை வதைப்பாயா?


நேசத்துடன் உன் விரல்
தனில் என் விரல் கோர்த்து
மரணம் வரை நம்
உறவை தொடர ஆசையடி!


Kadhal Impress Kavithai

அவளும் நானும்
இணைந்தால் சிறு துளி
மழை கூட இருவருக்கும்
அடை மழை தான்


வசந்தகால தென்றலில்
உனைத் தேடியே அலை
பாய்கிறது மனம் நந்தவனத்து
வண்ணத்துப்பூச்சியாய்...


வாசலில் உன் கை பதித்த
கோலத்தை விட உன் கால்
பதித்த கோலம் அழகு
பின்னர் ஏன் கோலமிடுகிறாய்?
வாசலில் உன் கால்
தடங்கள் போதுமானது


அடுக்கடுக்காக கட்டி வைத்த
ஆசை மூட்டைகளை கொட்டி
தீர்க்க காத்திருக்கிறேன்
உன் கண் அசைவுக்காக


மைனாக்கள் கூட
உன்னிடம் கூடு கட்ட
கற்றுக்கொள்ள ஆசை
படுகிறதடி மங்கை நீ
கூந்தல் கட்டும்
அழகை பார்த்தபின்


Impress Quotes in Tamil

கண்ணாக கருத்தாக உனை
காப்பேன் உயிராக உனை
கண்டேன் கலந்தேனே அட
உன்னுள் உறைந்தேனே இன்று
என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே


எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது


வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்
கண்களிலும் மை கொண்டு
பல கவிதைகளை


நிலவின் அழகை சொல்ல
வார்த்தைகள் கோடி
நீ எங்கு சென்றாலும் நான்
வருவேன் உன்னைத் தேடி


First Love Kavithai

உன்ன பாக்கவச்ச விதிக்குக்கூட
தெரியாது உன்ன பாத்த
நொடியில இருந்து உன்மேல
கிறுக்கா அலையுவேன்னு


ரசித்து பார்ப்பது
நிலவை மட்டுமல்ல
உன் முகத்தையும்
தான் அன்பே!


உன் கண் சிமிட்டலில்
காணாமல் போன என்
இதயம் உன் சிரிப்பினால்
துடித்து கொண்டிருக்கிறது


உன் மீதான என் காதலை
வார்த்தையில் சொல்வதை விட
வாழ்ந்து காட்டுவதே சிறப்பு
ஆதலால் வா வாழ்த்து காட்டுவோம்!


நித்திரையிலும் நிம்மதியான
உறக்கம் உன்னோடு இருப்பதாக
நினைத்து தலையணியை
அணைக்கும் போது


Impress Kadhal Kavithai

என்ன வரம் பெற்றதோ
அந்நீர்த் துளிகள் உன் மீது
பட்டு உன் தேகத்தில்
முத்த ஊர்வலம் நடத்த


சிலந்தி வலையில்
சிக்கிய பூச்சியும்
செவ்வந்தி உன்
விழியில் சிக்கிய
நானும் ஒன்று தான்


அந்த பூமித்தாயும் உன்னை
பார்த்து பொறாமை படுவாள்
நீ வெட்கப்பட்டு அவளை
பார்த்து சிரிக்கும் போது


என் இதயத்தை தேடி
அலைகிறோன் இவளது
விழிகளைக் காண்கையில்
இதனை ஏனென்று அறிய
விரும்பவில்லை இவளின்றி
வாழ்ந்திடவும் இயலவில்லை


Impress Whatsapp kavithai

வெட்கத்தை மூடி மறைக்க
முடியாமல் உன் அணைப்புக்குள்
இடம் தேடி மொத்தமாய்
உன்னுள் கரைந்து போகிறேன்


உன் மீது இருக்கும் அன்பால்
என்னை அறியாமல் திரும்பி
பார்ப்பதும் விரும்பி கேட்பதும்
உன் பெயர் ஒலிக்கும் போதே


உனைக் காணும்
போதெல்லாம்
எனைத் தென்றல்
தீண்டுகிறது
உன் பார்வையோ
உன் சுவாசமோ
என நான் அறியேன்!


உன் அன்பின் தொடக்கம்
யாராக இருந்தாலும்
உன் அன்பின் முடிவு
ஆயுள் வரைக்கும்
என்னோடு இருந்தால்
மரணம் கூட சுகமே


யார் சொன்னாலும் பிடிக்காத
வார்த்தை தான் ஏனோ அவன்
சொல்கையிலே மீண்டும் மீண்டும்
கேட்டிட தோன்றுகிறது


First Love Kavithai

நீ நிலவும் இல்லை
நட்சத்திரமும் இல்லை
இவைகளை எல்லாம்
அள்ளி சூடிக்கொள்ளும்
வானம் நீ!


மொத்தமாய் உன் அன்பு
என்னை ஆதிக்கம்
செய்ய சுத்தமாய்
மாறிப்போனேன் நானும்


உன் மீதான காதல்
என்பது நீ இருக்கும்
வரையல்ல நான்
இறக்கும் வரை


நீ கடல் கடந்து போனாலும்
கடல் தாண்டியும் வருவேனடி
உன்னைக் கவர்ந்து செல்ல


அரை நொடி வாழ்ந்தாலும்
போதுமடி உன் அரவணைப்பில்
நான் வாழ வேண்டும்
அடுத்த நொடியே மரணம்
வந்தாலும் சுகமாய் ஏற்பேன்


உலகில் உள்ள அனைத்து
பூக்களின் வாசங்களும்
சற்று குறைவு தான்
உன் கூந்தல் சூடி பின்
வாடிப்போன அந்தப்
பூக்களின் வாசத்தின் முன்


உன் மடியில் தலை சாய்ந்திருக்கும்
இந்த நொடி போதும் பெண்ணே
இந்நொடி என் உயிர் போனாலும்
சந்தோஷம் நாளை என்ற
கனவு களைந்து போகட்டும்


Mudhal Kadhal kavithai

முடிவே இல்லாத காதலும்
பிரிவு இல்லாத வாழ்வும்
உன்னிடம் வேண்டும்
உன்னிடம் மட்டுமே வேண்டும்


வானில் நிலவைக்
காணவில்லையாம்
விண்மீன்கள் என்னிடம்
கூறின நான் எப்படிச்
சொல்வது வானத்து நிலவு
என்னுடன் இருப்பதை?


மழைச்சாரலாய் நீ வர
கவிச்சோலையானேன் நான்!


நீ தொட்டு சென்ற
வெட்கத்திலும் விட்டு
சென்ற மிச்சத்திலும்
சிக்கித் தவிக்கிறது
என் நாணம்


Kadhalan Kavithai

என்ன தவம் செய்ததோ
உன் தொடுதிரை
அலைபேசி நித்தமும்
உன் விரல்கள் தீண்டுவதற்கு


என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று


என் காதில் நீ
உரைக்கும் காதல்
இரகசியம் என்னை
உறைந்து நிற்க
வைக்கும் மந்திரமடி


Kadhalan Kadhali Kavithai