தொலைதூர காதல் கவிதைகள் | Long Distance Tamil Love Quotes

உங்கள் காதலன் அல்லது காதலியை பிரிந்து தொலை தூரத்தில் வாழ்பவரா? உங்களுக்கான தொலைதூர கவிதைகள் தொகுப்பு

தொலைதூர காதல் கவிதைகள் | Long Distance Tamil Love Quotes
  • Collection of Best Long Distance Tamil Quotes
  • Long Distance Love Quotes in Tamil
  • long distance love kavithai in tamil
  • Latest Tamil Long Distance love Quotes
  • 2024 Long Distance Quotes Tamil
  • Long distance kavithai in tamil
  • Tamil Love Calculator
  • tamil missing quotes

இதயங்கள் அருகில் இருக்கும் பொழுது,
இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை...


நேரம் நெருங்க விடாமல் தடுப்பதால்,
நினைவு துளிகளில் தவிக்கிறேன்!



தவிக்கும் இரு நெஞ்சம்,
தடுமாறுகிறது என் நெஞ்சம்!
என் காலடி கெஞ்சும் உன் வருகைக்காக!


💗 காதல் கால்குலேட்டர் 💗


தொலைவால் தூரத்தில் இருந்தாலும்
என் நினைவால் நெஞ்சோரத்தில் நீ...


நீ என்னை தவிர்ப்பதும்,
நான் உனக்காக தவிப்பதுமே நம் காதலாகிவிட்டது!


தூரங்கள் பிரிவில்லை, என் துணையே!
துயிலில் சந்திப்போம் வா என் கானாவில்



உன் அருகில் வந்து
உன்னை அணைத்து
அன்பின் மழையில்
நனைந்து விட
துடிக்கும் என் இதயமடி



எப்போதும் நான் நினைப்பது ஒன்று தான்
தொலைவில் உள்ள உன்னை
எப்போது நேரில் காண்பேன் என்று


கரம்பிடித்து இதழ் அணைத்து கதைக்க
கனா இருந்தாலும் விரல் தொடாமல்
விலகி இருப்பதில்
வினோத சுகம்
கண்மணியே


குயிலின் குரலோசை கேட்டேன்
தொலைவிலிருந்து தொலைபேசி மூலம்



நீ பேசும் சில நொடி நேரங்களுக்காக
பல மணி நேரம் காத்திருக்கும்,
அந்த நொடிகளுக்கு தெரியும்
நான் உன் மீது கொண்ட
பாசத்தின் உச்சம்..


தூரம் பெரிதாய்த் தெரியவில்லை
அவள் அன்பின் முன்பு


நீயில்லா ஒவ்வொரு பொழுதும்
நம் நினைவுகளைத் தவிர
வேறு எதற்கும்
அனுமதி இல்லை
என் அருகில்


உன்னோடு பேச முடியாத போது தான்
உன் மீது உள்ள அன்பு இன்னும் அதிகரிக்கிறது


உன் அருகாமை மட்டுமல்ல
உன் நினைவுகள் கூட
என் கன்னம் சிவக்க வைக்கிறது


நீ நிலவு அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான் உன்னை ரசிக்க முடியும்


உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக
நான் கடக்கும் ஒவ்வொரு நாளும்
பல யுகம் போல காட்சியளிக்கிறது...


விடியாத இரவு வேண்டும்
அதில் கலையாத கனவு வேண்டும்
அந்த கனவிலாவது நீ எனக்கு வேண்டும்


சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
பல நேரம் தொலைவில்
ஆனால்.. நீ என்றும் என் மனதில்


கண்களுக்கு அருகில் இருப்பதை விட
இதயத்திற்கு அருகில் இருப்பது தான் காதல்



உங்களுக்கான கவிதை ✨


ஏன் இத்தனை தூரத்தில் மிகப்பிடித்தவர்களை
வைத்துவிடுகிறது இந்த பாழாய்ப்போன காதல்


மனதிற்கு பிடித்தவரை பார்த்து
பேச காத்திருப்பதே
அவர் மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்


அணைத்துக்கொண்டு அருகில் இருப்பதும் காதல் தான்
நினைத்துக் கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான்


உன்னைக் காண அடம்பிடிக்கும் மனதை
சமாளிக்கிறேன் நீ வருவாயென


அருகில் இருக்கும் அன்பு அழகானது
ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ
அதை விட ஆழமானது


தூரமாய் இருப்பதும் ஒரு காரணம் தான்
உன் மீது உள்ள அளவில்லா அன்பை அறிந்து கொள்ள


அருகில் இருந்தால் அணைத்து மகிழ்வேன்
தொலைவில் இருப்பதால் நினைத்து மகிழ்கிறேன்



உனக்கும் எனக்கும்
இடையிலான தொலைவு அதிகரித்ததால் தான்
உனக்கும் எனக்கும் இடையிலான காதலும் அதிகரித்தது


மனதிற்கு பிடித்தவர்களையும்
அதிக பாசம் வைப்பவர்களையும்
தொலைவில் வைத்தே
அழகு பார்க்கிறது விதி


இன்னும் நீண்டாலென்ன என்று
தோன்றாமல் இருப்பதில்லை
நம் பிரியமானவர்களோடு
இருக்கிற நொடிகளில்


கனவிற்க்கும் நிஜத்திற்க்கும்
ஒரு வித்தியாசம்
கனவில் என் அருகில் நீ
நிஜங்களில் உன் தொலைவில் நான்


உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
கடிகார முள் கூட
என் இதயத்தை கிழிக்கிறது


எழுத ஆரம்பிக்கும்
கவிதையின் பொருள்
நீ என்பதாலேயே
அது கவிதை எனவாகின்றது


ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே
நாடகம் போலே
நாட்கள் போகுதே


உன் முகத்தை பார்க்கவே
என் விழிகள் வாழுதே


என்னோடு நீ இல்லை
உன்னோடு நான் இல்லை
ஆனால் வாழ்ந்து விட்டோம்
கனவு உலகத்தில்


மிக அழகானது
சிலரின் நினைவுகள்


எவ்வளவு தொலைவில்
நீ இருந்தாலும்
உன் நினைவுகள் மட்டும்
என்னை தொல்லை செய்து
கொண்டே இருக்கின்றது


நினைவுகள் முழுவதையும்
நீ நிரப்பி விட்டதால்
இன்று நிழல்கள் கூட
உன்னை தான்
நினைவு படுத்துகின்றது


உண்மையாக நேசிக்கும்
உறவு நம்மை விட்டு
எங்கேயும் போகாது
போகவும் ஒருபோதும்
நினைக்காது


பூவோடு சேர்ந்திருக்கும்
வாசத்தை போல்
உன் நினைவோடு சேர்ந்திருக்கிறது
என் சுவாசம்


சிறகுகள் இல்லை என்னிடம்
உன்னை தேடி வர
ஆனால்
இதயம் இருக்கிறது என்றும்
உன்னை நினைத்திட


நினைப்பதற்கு நினைவுகள்
பல இருந்த போதும்
உன் நினைவை விட
இனிமையான நினைவுகள் எதுவுமில்லை


தொலைதூர காதலின் வலி
நேசிக்கும் ஒருவரை
நினைத்த நேரம்
பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போவது தான்


கனவு இல்லாத
இரவுகள் கூட இருக்கலாம்
ஆனால் உன் நினைவுகள்
இல்லாத இரவுகள் இருக்க
வாய்ப்பே இல்லை


எல்லோருக்குள்ளும் இருக்கிறது
ஏதோ ஒரு
தீராத தேடலும்
முடியாத காத்திருப்பும்


நினைக்கும்போது மட்டும்
வருவேனென்று சொல்லிவிட்டு
நினைவு முழுக்க
நீயாகி போனாய்


தமிழ் இலக்கணத்தில்
சொல்லும் பொருளும்
பிரிவதே இல்லையாம்
என்னை பிரியாத
உன் நினைவுகளை போல


சேரவும் முடியாது
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
சிலரின் காதலும் தான்


உன் அருகில் வந்து
உன்னை அணைத்து
அன்பின் மழையில்
நனைந்து விட துடிக்கும்
என் இதயமடி


உன் வருகைகள் இன்றிய
பொழுதுகள் யாவுமே
வெறுமையான பொழுதுதான்
எனக்கு


இடைவெளி என்பது
இரு இதயங்களுக்கிடையே
இருப்பது இல்லை


என் ஞாபகக் கிளையெங்கிலும்
உன் நினைவு பூக்கள்


அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை


நம் மீது அன்பு
வைத்துள்ள இதயம்
தொலைவில் இருந்தாலும்
ஆயுள் வரைக்கும்
அன்பாக இருக்கும்


என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன்


நீ என்னோடு
தான் இருக்கிறாய்
நானாக


அருகில்லா உன்னை
ஆயுள் முழுவதும்
கைப்பிடித்து என்னருகில்
அமர வைக்கவே முயல்கிறேன்


நீ தூரத்தில் இருந்தாலும்
உன்னை ஒரு துளி
கூட மறந்ததில்லை
என் இதயம்


தொலைவால் தூரத்தில்
இருந்தாலும் என்
நினைவால் நெஞ்சோரத்தில் நீ


தொலைதூரம் நீ போனால்
உன்னை தேடி
வெகு தூரம்
பயணிக்குறது உள்ளம்


தொலைதூர காதலில்
அன்பை காட்டிலும் ஒருவர்
மீது ஒருவர் வைத்திருக்கும்
நம்பிக்கையே பெரியது


நீ என் இதயத்தில் இருப்பது அறியாது
என் கண்கள் உன் வரவை
எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது


என் கண்கள் உன்னை
பார்க்காமல் கூட
இருந்து விடும் என்
இதயம் உன்னை பற்றி
நினைக்காமல் இருக்காது


நினைவிலும் கனவிலும்
நெருங்கியும் விலகியும்
நீ போதும்
என் இந்த பிறவிக்கு


உன்னை காண
காத்து இருக்கிறது
எனது கண்கள்


விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது


தூரம் பெரிதாய்
தெரியவில்லை அவள்
அன்பின் முன்பு


நீ என்னுடன் பேசும்
சில நிமிடங்களுக்காக
பல மணி
நேரம் உனக்காக
காத்திருக்கிறேன் நான்


ஆயிரம் கவலைகள்
இருந்தாலும் எனக்கு
இருக்கும் ஒரே ஆறுதல்
நீ மட்டும் தான்


காலங்கள் தான்
தோற்று போகுமே தவிர
உனக்காக என்னுடைய காத்திருப்பு
என்றுமே மாறாது


என் கண்களை விட்டு
நீ தூரமாக
இருக்கலாம் ஆனால்
உன் இதயத்தை
விட்டு தூரமாக
என்னால் இருக்க முடியாது


ஒருவரின் நினைவுகளை
சுமந்து கொண்டு
வாழ்றது அவ்வளவு
சுலபம் கிடையாது


உன்னுடன் பேசாமல்
மட்டும் தான்
இருக்கின்றேன்
நினைக்காமல் இல்லை


காணாத போது
கண்களுக்குள்
வாழ்கின்றாய்


நம் இருவருக்கும்
இடையில் தூரங்கள்
எவ்வளவு இருந்தாலும்
நம் அன்புக்கு முன்னாள்
அவை பெரிதல்ல


கண் விழித்ததில் இருந்து
தூக்கத்திற்கு செல்லும் வரை
எனக்கு துணையாக இருப்பது
உன் நினைவுகள் மட்டும் தான்


அருகில் இல்லாத போதும்
இருப்பதாகவே உணரவைக்கும்
அன்பிற்கு அழிவில்லை
ஆயுளும் அதிகம்


துடிப்பது என் இதயம்
துடிக்க வைப்பது
உன் நினைவுகள்


சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
பல நேரம் தொலைவில்
ஆனால் நீ
என்றும் என் மனதில்


உன்னோடு இருந்த
நாட்களைவிட
உன் நினைவுகளோடு
வாழும் வாழ்க்கை
சுமையானது சுகமானது


நினைவாக நீ
இருந்தால் கூட போதும்
இந்த மூச்சிலும்
இறுதி மூச்சிலும்


அக்கறை காட்டும் உறவு
எப்போதும் தூரமாய்
தான் இருக்கும்


நான் இங்கே
நீயும் அங்கே
இந்த தனிமையில்
நிமிஷங்கள் வருஷமானதே


தொடுதூரத்தில் இருந்தாலும்
தொலைதூரத்தில் இருந்தாலும்
நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
தொலைந்தே வாழ்கிறோம்


நான் உன்னை விட்டு
தொலைவில் இருந்தாலும்
என் நினைவு எப்போதும்
உன்னை பற்றி
மட்டுமே இருக்கும்


அடிக்கடி உரையாடல்கள்
இல்லை என்பதற்காக
உறவுகள் இல்லை
என்றாகிவிடாது


நீ நிலவு
அழகில் மட்டுமல்ல
தொலைவிலும் நான்
உன்னை ரசிக்க முடியும்


சேரவும் முடியாது
பிரியவும் முடியாது
ஆனால் ஒன்றாகவே பயணிப்பது
தண்டவாளங்கள் மட்டுமல்ல
சிலரின் காதலும் தான்


திரும்பிவரும் வழியெல்லாம்
தேடுகிறேன்
உன்னைப் பார்க்கவந்தபோது
பேச நினைத்து
எடுத்துவந்த வார்த்தைகளை


நிசப்த நடுநிசியில்
பேரிரைச்சலாக
உன் நினைவுகள்


பேசும் பொழுதுகளன்றி
பேசாப் பொழுதுகளிலும்
பெருகும் ப்ரியம் நீ


என் கண் பார்க்காத
தூரத்தில் நீ இருந்தாலும்
என் இதயம் மறக்காத
ஒரே உறவு நீ தான்


முகம் பார்த்து பேச
ஆசையாக இருந்தாலும்
வரும் குறுஞ்செய்திகளை
பார்த்து மனம்
ஆறுதல் அடைகிறது


குறுஞ்செய்தியாக வருவது
வெறும் எழுத்துக்களே
ஆனால் உணர்கிறேன்
நீ என்னோடு இருப்பதாக


உன் நினைவுகளை
சுமந்து வருவதனால்
என் கிறுக்கல்கள் கூட
கவிதையாகிறது


நீ தூரமாக இருந்தாலும்
உனது குரலை கேட்காத
நொடிகள் இல்லை
கேட்கிறேன் இதய துடிப்பில்
ஏனென்றால் என் இதயம்
துடிப்பது உனக்காக அல்லவா


முகம் பார்த்து பேச
ஆசையாக இருந்தாலும்
வரும் குறுஞ்செய்திகளை
பார்த்து மனம்
ஆறுதல் அடைகிறது


புறக்கணிக்கிறேன்
நீ வராத
பொழுதுகளை


எப்பொழுதும் பற்றாக்குறையாகவே உள்ளது
உன் அருகாமையும்
உன் காதலும்
உன் முத்தமும்
உன் தீண்டலும்


நீ தொலைவில் இருப்பது
வலியை கொடுத்தாலும்
என் சுகமான நினைவுகள்
உன்னை சுற்றியே
சுழல்கிறது மகிழ்வுடன்


என்னருகே நீ
இல்லை என்பது
உண்மை அவ்வளவு
உண்மை நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்


இடைவெளி வலியை
தருமென தெரிந்தும்
பிடிவாதமாய் அனுபவித்து
இருக்கிறோம் இருவரும்


என் அருகில் நீ
கனவு என்றால்
விழிக்க விரும்பவில்லை
நினைவு என்றால்
உன் அருகிலேயே
வாழ்ந்திட வேண்டுகிறேன்


மனதிற்கு பிடித்தவரை
பார்த்து பேச
காத்திருப்பதே அவர்
மீது நாம் வைத்துள்ள
மிகப்பெரிய காதல்


கண்கள் அழவில்லை
உதடுகள் பேசவில்லை
ஆனால் இதயம் மட்டும்
அதிகமா துடிக்கிறது
உன்னை கானாத போது


மூச்சிக்கு முன்னூறு
தடவை நினைத்தாலும்
திகட்டாத ஒரே
அன்பு நீ மட்டுமே


உலகின் அனைத்து
காத்திருப்புகளும் ஏதோ
ஒரு விடியலுக்காகதான்


அணைத்து கொள் என்னை
உன் தோளோடும் வலி
தீர அழ வேண்டும்
உன் மனதோடு


அரை நொடி
நிகழ்வையும்
ஆயுள் வரை
அசைபோடுவதுதான்
காதல்


கண்களுக்கு அருகில்
இருப்பனத விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது நான் காதல்


நீ வேண்டும் என்று
நான் வேண்டாத
தெய்வமில்லை


நேசிப்பவர்களை தினமும்
பார்க்க முடியாவிட்டாலும்
தினமும் அவர்களோடு
மனம் விட்டு பேசி
சிரிப்பதும் சந்தோஷம் தான்


தனிமை இரவானது
கற்பனை உறவானது
கவிதை அணைப்பானது
உறக்கம் துறவானது
உன் நினைவுகள்
வரமானது


பார்க்க மறுத்த
விழிகளும் காத்துக்கிடக்கு
உன்னன்பில் தொலைந்து


இதயம் இருப்பதோ
என்னிடத்தில் தான்
ஆனால் எப்போதும்
நினைப்பதோ உன்னை
பற்றி மட்டுமே



உறங்கும் பொழுதும்
உறங்கா நிஜம்தான்
காதல் நினைவுகள்


துடிப்பதை விட உன்னை
நினைப்பதற்கே நேரம்
சரியாக இருக்கிறது
என் இதயத்திற்கு


அன்பான உன் ஞாபகம்
எப்போதும் எனக்குள் இருக்கும்


ஆயிரமாயிரம் யுகம்
காத்திருப்பேன் நான்
உன்னை காணும்
ஓர் நொடிக்காக


உன்னை தேடாதது போல்
நடிப்பதென்பது எளிது
தான் அந்த நொடிகளை
நகர்த்தி போவது
தான் மிக கடினம்


ஒரு நொடி
பிரியவும்
தயங்குதே
இருதயம்


காதல் காத்திருப்புகளின்
நிறம் ரங்கோலி


உன் வருகையை எதிர்பார்த்து
தினமும் உதிர்ந்து கொண்டே
இருக்கும் என் காதலும் காலமும்


பெய்த மழை உன்னை
ஞாபகப்படுத்தாமலாவது
பெய்திருக்கலாம்


அருகாமையில் நீ இல்லை
என்றாலும் என் தனிமையை
கூட இனிமையாக உணர்கிறேன்


என் இரவுகளில்
என்னவனின் நினைவுகள்
யாதும் நீயே


எப்போதாவது நினைத்து பார்ப்பாயா
என்று தெரியவில்லை என்னை
எப்போதுமே நினைத்தபடியே
இருக்கிறோன் நான் உன்னை


தொலைத்தும் பார்த்து
விட்டேன் தேடி வருகிறது
உன் நினைவு


உன்னை ஒவ்வொரு நொடியும்
தேடுகிறேன் என்பதை
சொல்ல உன்னிடம்
ஒரு நொடி கிடைக்குமா


உறங்க முடியாத கனவுகளில்
தூங்க முடியாத நினைவுகள்
விழித்துக் கொண்டேயிருக்கின்றன


தூரத்தில் இருந்தாலும்
அருகிலேயே வாழ்கிறாய்
நினைவுகளாக


உன்னைப் போல் தான்
இம்மழையும் விட்டு
விட்டுப் பொழிகிறது
அன்பை என் மேல்


விடிந்தாலும் தூக்கத்தில்
விழி ஓரத்தில் வரும்
கனவு நீ


நீ இல்லாமல் நான் இல்லை
என்பது கூட பொய்யாக
இருக்கலாம் ஆனால்
உன்னை நினைக்காமல்
நான் இல்லை என்பதே மெய்


உனக்காக
பொறுமையாக
காத்திருப்பதும்
ஒரு அழகு தான்


உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓரு சுகமே
உயிருக்குள் உன்னை
சுமந்து இருப்பேன்
ஒரு தாய் போல


ஆயிரம் பேர் அருகில்
இருந்தாலும் உன் அன்பிற்கு
ஈடாக இங்கு ஒருவரும்
இல்லை அன்பே


அலைபாய்கிறது மனம் உன்
நினைவுகளை மட்டும் தேடி
முகவரி தொலைத்த கடிதமாய்


உன் மௌனத்தை
மொழி பெயர்க்க
முனைந்தேன் வார்த்தைகள்
நிசப்தமாய் அலைகின்றன


தொல்லையாக தான்
இருக்கிறது தொல்லை
செய்யாமல் நீ
தொலைவில் இருப்பதால்


நம் நினைவுகளுடன்
விடிகிறது ஒவ்வொரு
பொழுதும் நம்
புகைப்படங்களுடன்
நகர்கிறது ஒவ்வொரு
ஊரடங்கும் எனக்கு


எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று
தானாக ஓடும் என் கால்கள்


அன்று இரவெல்லாம்
பகலுக்காக காத்திருந்தேன்
உன்னை நேரில் காண்பதற்கு
இன்று பகலெல்லாம்
இரவுக்காக காத்திருக்கிறேன்
என் கனவில் காண்பதற்கு


நீ என்னிடம் பேசவில்லை
என்றாலும் உன்
நினைவுகள் மட்டும்
என் மனதில் இருந்து
கொண்டே தான் இருக்கும்


அன்பு எதையும்
வெல்லும் என்பதை
நிரூபிக்கும்
சோதனையே தூரம்


உன் செய்திகளுக்காக
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியும் நான் நரகத்தின்
வழியை அனுபவிக்கிறேன்


தொலைவாக நீ இருந்தும்
தொடுகிறாய் நொடிக்கொரு
முறை நினைவெனும்
கரங்கள் கொண்டு


உன் அருகில் வாழும்
பாக்கியம் எனக்கு
இல்லை ஆனால் என்
அன்பில் வாழும்
அதிர்ஷ்டம் உனக்கு
மட்டுமே உண்டு



கேட்டுபெற விருப்பமில்லை
என் இதயம் புரிந்து நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்
காத்து கிடக்கிறது என் காதல்


உன் மனை முற்றத்தில்
நீ மதிமுகம் காட்ட
நான் காத்திருப்பேன்
அன்றே என்
வானில் பெளர்ணமி


ஒவ்வொரு நாளும் ரசிப்பதற்கு
ஆயிரம் விஷயங்கள் சுற்றி
இருந்தாலும் உன்
நினைவுகளை மட்டும்
தினமும் ரசித்து பழகுகிறேன்


எங்கேயோ இருக்கும்
உன்னை என்றாவது
பார்த்துவிடுவேன் என்று
என்னை இன்னும்
வாழச் சொல்கிறது
உந்தன் நினைவுகள்


பிடித்தவர்கள் எல்லாம்
அருகில் இருந்து
விட்டால் நினைவுகளுக்கு
என்ன மரியாதை?


இரு இதயங்கள்
விசுவாசமாக
இருக்கும் போது
தூரம் முக்கியமில்லை


தொங்கிக் கொண்டிருக்கும்
உடலை விட்டு
தொலை தூரத்தில் உயிர்
வெளிநாட்டில் நீ


நான் இதுவரை
காத்திருந்து கிடைத்த
சிறந்த விஷயம் நீ


இந்த இடைவெளியை
கொஞ்சம் சுருக்கி விடேன்
சுருங்கிய இதயமிரண்டும்
சுகமாகி துடிக்கட்டும்


நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்


நீயற்ற இரவுகளும்
சற்று தாமதமாகவே
விடிகிறது உன்
வருகைக்காக காத்திருந்து


கைகள் இணைந்திருந்தால்
மட்டுமா காதல்?
இதயம் இணைந்திருந்தால்
தான் காதல் தொலைவில்
இருந்தாலும் தொலையக்கூடாது


தூரத்தை என்னால்
தாங்க முடியும் ஆனால்
நீ இல்லாத வாழ்க்கையை
என்னால் கற்பனை
செய்து பார்க்க முடியாது


என் நெஞ்சில் சிறு
பாரம் என்னையும்
அறியாமல் கண்களில்
ஈரம் காரணம் நமக்குள்
இருக்கும் தூரம்


ஒவ்வொரு நாளும்
உன்னை இழப்பது
என் இதயத்தை
கனமாக்குகிறது


இப்போது என்ன செய்துக்
கொண்டு இருப்பாய் என்று
எப்போதும் நினைத்துக்
கொணடே என்
நிமிடங்கள் நகர்கின்றன


என் நாள் எவ்வளவு
கஷ்டமாக இருந்தாலும்
ஒரு நிமிடம் உன்னிடம்
பேசினால் எல்லாம்
கஷ்டமும் பறந்து போகும்


காத்திருப்பது கூட
சுகம் தான் நமக்கு
பிடித்தவர்களுக்காக
என்றால் மட்டும்


தூரமாயினும் உள்ளம்
உருகி எல்லா
நாளும் உன்னை
நினைக்க தோன்றும்
அன்பு போதும்


நீ என்னருகில் இல்லை
என்பது எவ்வளவு
உண்மையோ அவ்வளவு
உண்மை நீ எனக்குள்
இருக்கின்றாய் என்பது


தொலைவு என்பது
இரு உடல்களுக்கு
இடையில் மட்டுமே இரு
உள்ளங்களுக்கு இடையில்
இருப்பது இல்லை


நித்திரையைக்
களவாடி நினைவுகளை
பரிசளிக்க உன்னால்
மட்டுமே முடியும்


என் தனிமை என்பது
யாருமில்லாத போது அல்ல
நீ இல்லாத போது


எத்தனை உறவுகள்
என்னை சுற்றி
இருந்தாலும் என்
உள்ளம் தேடும்
ஒரே உறவு நீ தான்


ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன் என்னவனின்
வருகைக்காக நான்


தள்ளி இருப்பதினாலேயே
தவிக்கிறேன் என்று சொல்ல
முடியாதடி நொடிப்பொழுதும்
நினைவுகள் உன்னிடம்
நிறைந்து இருக்கையில்


காதல் உண்மையானதாக
இருக்கும்போது தூரம்
ஒன்றுமில்லை


பார்த்த ஞாபகம
என்னுள் சிறகடிக்கிறது
உன்னை பார்க்காத போதும்


இதயத்தின் ஒவ்வொரு
துடிப்பிலும் உன் ஞாபகங்கள்
கலந்திருக்க நீ தொலைவில்
இருந்தாலும் என் நினைவுகளில்
என்றும் பக்கம் தான்


நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில்
என் மனதில்
அருகில் இருக்கிறோம்


ஆயிரம் மைல்கள்
தொலைவில் இருந்தாலும்
உன்னை விட வேறு
யாரும் என் இதயத்திற்கு
நெருக்கமானவர்கள் அல்ல


காலம் மட்டுமே மாறும்
நினைவுகள் ஒரு
போதும் மாறாது


உன்னை நினைத்து
நான் என்னை மறந்தேன்


பணிக்காற்று குளிரும் இரவின்
இருளும் என்னை தனிமையாக்கிய
போதெல்லாம் நீயும் நானும்
நிலவின் நிழலில் கட்டி
அணைத்தபடிநின்ற நினைவுகள்
என்னை தேற்றுதடி

நீ மட்டும் அழகில்லை
உன்னை நினைத்தே
உள்ளுக்குள் இம்சை
செய்யும் உன்
நினைவுகளும் இன்னும் அழகு